உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி அவனது கை விரல்களும் துண்டிக்கப்பட்டுத் தரையில் சித றின. அதற்கு மேல் அங்கு நின்றால் தன்னுயிருக்கே ஆபத்து என உணர்ந்து நடுங்கிய மாந்தியப்பன் ஒரே தாவாகத் தன் குதிரையில் தாவி, போர்க்களத்தை விட்டே ஓடிவிட்டான். மகனின் வலது கை விரல்கள் தன்காலுக்கருகே சிதறிக்கிடப் பது கண்ட செல்லாத்தாக் கவுண்டர், அடிபட்ட புலியைப் போலச் சீறிக் கிளம்பி, தனது கைவாளை வையம்பெருமானின் நெஞ்சில் நுழைத்துவிட்டார். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இடிமுழக்கம் செய்துகொண்டு கிளம்பிய வீரமலையைத் தலை யூர் வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். "வாழ்க வளநாடு! வாழ்க பொன்னர் - சங்கர்!" என்று ஒலியெழுப்பியவாறு வையம் பெருமான் கீழே சாய்ந்தான். அந்த வீர இளைஞனின் உடலை மிதித்துக்கொண்டு தலையூர் வீரர்களும் வளநாட்டு வீரர்களும் மீண்டும் மிக உக்கிரமாக, மோதத் தொடங்கினர். தலையூர் வீரர் களை உற்சாகப்படுத்திக் கொண்டே செல்லாத்தாக் கவுண்டர் வீரமலையை எப்படியும் வீழ்த்திட வேண்டுமென்று வெகு ஆவேசமாகப் போர் புரிந்தார். பொன்னர் சங்கர் எனும் ஈடு இணையற்ற மாவீரர்களின் தளபதியான வீரமலை செல்லாத் தாக் கவுண்டரின் வெறித்தனமான போர் கண்டு அஞ்சவில்லை. மற்றொரு பகுதியில் தலையூர்க் காளியும் சங்கரும் போர்க் களத்தில்! இருதரப்பு வீரர்களின் உடல்கள் கைகால்கள் அறு பட்டும் - தலைகள் துண்டிக்கப்பட்டும் ரத்தத் தடாகத்தில் மிதந் தன. பாறைகளில் மோதும் ஈட்டிகள் எழுப்பிடும் பெருஞ் சப்தம்! வாட்கள் ஒன்றோடொன்று மோதிக் கிளம்பும் ஒலி! வில்லில் இருந்து விருட்டென்று பறக்கும் கணைகளின் ஆர வாரம்! இருபுறமும் வீரர்களை உற்சாகப்படுத்த அதிரும் முர சங்கள்! இவை குறித்துக் கவலைப்படாமல் கழுகுகளும், காகங் களும், நரிகளும், பருந்துகளும், பிண விருந்துண்டு மகிழ் வதிலும், விழுந்த பிணங்களின் அவயங்களை வாயில் கெளவிக் கொண்டு ஓடுவதிலும் பறப்பதிலும் கண்ணுங்கருத்துமாயிருந்தன! எடும். எடும், எடும் என எடுத்தது ஓர் இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே. விடு விடு, விடு பரி கரிக் குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே வெருவர வரிசிலை தெரித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே... செருவிடை அவரவர் தெரித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே..." 503