உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் பங்காளிகள் நெல்லியங்கோடன் தொலைந்து போனது போல்தான் என்று அவனது சொத்துக்களையும் தனதாக்கிக் கொள்கிறார்கள். நெல்லியங்கோடனின் சிற்றப்பனான செல் லாத்தாக்கவுண்டர் தனது மகனுக்கு தாமரை நாச்சியை மண முடிப்பது என்று முடிவெடுக்கிறார். மலைக்கொழுந்தாரும் தனது மகளை செல்லாத்தாக்கவுண்டர் மகனுக்கு கொடுப்பது என்று முடிவெடுக்கிறார். இது விஷயம் சோழன் தோட்டிக்கு தெரிய வர, அவன் நேரே நெல்லியங்கோடனிடம் சென்று செய்தியைத் தெரிவிக் கிறான். உடனே இருவருமாக மணியங்குரிச்சிக்குச் செல்கிறார் கள். மணப்பெண் இருக்கும் வீட்டினருகில் வந்து பிச்சை கேட்கிறான் நெல்லியங்கோடன். அவன் அத்தை ஒருபடி கம்பு போடும்படி சொல்கிறாள். அப்பொழுது நெல்லியங்கோடன் தான் பிச்சை வாங்க வரவில்லை என்றும், தாமரை நாச்சி யைப் பரிசம் போட வந்தேன் என்றும் கூற, அங்கே வந்த மலைக்கொழுந்தார் நெல்லியங்கோடனை நையப்புடைத்து செல்லரிக்கும் கொட்டகையில் போட்டு பூட்டச் சொல்கிறார். இது கேட்ட தாமரை நாச்சி கொதித்து எழுகிறாள். தனது முறை மாப்பிள்ளையான நெல்லியங்கோடனையே மணப் பேன் என்று கூறி, தனக்குப் பூட்டியிருந்த மணப்பெண்ணுக் குரிய நகை நட்டுக்களை வீசியெறிகிறாள். மலைக்கொழுந்தார், தாமரை நாச்சியை கடைசியில் நெல்லி யங்கோடனுக்கு மணமுடித்து வைக்கிறார். இது அறிந்த செல் லாத்தாக்கவுண்டர் பொங்கியெழுகிறார். கை கலப்பு நேரும் நிலையில் அங்கிருந்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைக் கிறார் மலைக்கொழுந்தார். இருப்பினும் தனது மகளின் பிடிவாதத்தில் மலைக்கொழுந் தார் கொண்ட கோபம் தணியவில்லை. தகப்பன் போக்கில் வெறுப்புற்ற தாமரையாள். "என் வயிற்றில் சிங்கம் போல இரு மகன்கள் பிறப்பார்கள். உன் வீட்டில் உமக்கு பேத்திகள் இருவர் பிறப்பர். அவர்கள் இருவரையும் என் மக்கள் மணந்து கொண்டு சிறையில் போடுவார்கள்' என்று சபதமிடுகிறாள். நெல்லியங்கோடன் தனது நிலையை சோழ அரசனிடம் சொல்லி முறையிடுகிறான். அவர் நெல்லியங்கோடனுக்கு முற்றிலும் மோசமான, கரடு முரடான முட்களும் கள்ளியும் நிறைந்த ஒரு பகுதியைக் கொடுத்து பிழைத்துக் கொள்ளச் சொல்கிறார். தாமரையாள் அந்தக் கரடு முரடான பகுதியை தனது கணவனுடனும், சோழன் தோட்டியுடனும் சேர்ந்து பண்படுத்துகிறாள். 538