4 அங்கிருந்த 'கெஸ்ட்ஹவுஸ்' ஆட்களைக் கூப்பிட்டு வாழைப்பழம் கொண்டு வரச் சொல்லி பன்றிகளுக்குப் போட்டுக் கொண்டேயிருந்தார். அவைகளும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடச் சாப்பிட கெஸ்ட் ஹவுஸ்காரர்கள் வாழைப் பழத்தைக் கொண்டு வந்து கொண்டேயிருக்க, சுமார் மணி வீசிக் நேரம் ஓயாது வாழைப் பழத்தை கொண்டேயிருந்தார். அந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் புகைப்படம் தான் எடுக்க முடியவில்லை. காரணம் நிரவி நிற்கும் இருட்டு! ஒரு இதே போல் இன்னொரு சம்பவம்! அடுத்த நாள் ‘டாப்ஸ்லிப்' யானைகள் முகாமுக்குச் அய்யாவின் துணைவியார் மல்லிகா சென்றிருந்தோம். அங்குள்ள யானைகளுக்கெல்லாம் வாழைப்பழம் கொடுத்தார். ஐயாவும் அதையே பின்பற்றினார். முதல் வாழைப் பழத்தை ஒரு குட்டியானைக்கு கொஞ்சம் எட்ட நின்று கொடுத்தார். குட்டி யானையோ அந்தப் பழத்தை துதிக்கையை நீட்டி வாங்கிட ரொம்பவும் சிரமப்பட்டது. அதை வரிசையாய் புகைப்படம் எடுத்த நான் விடவில்லை. "சும்மா அதோட வாயிலேயே கொடுங்கய்யா! அது ஒன்றும் செய்யாது!" என்று உரக்கக் கூவினேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே யானையை நெருங்கி வாழைப் பழத்தை அதன் வாயிலேயே திணித்தார். அப்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அப்படியே சிறு குழந்தை போல் ஆகிப் போயிருந்தார். இந்த அனுபவத்தை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் படத்துடன் பேட்டியாகக் கொடுத்தேன். அதில் அது பிரசுரமாகவும் செய்தது. -
பக்கம்:மறக்க முடியுமா.pdf/10
Appearance