உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 (பாண்டியன் அரண்மனை மனோகரன்: விஜயா... இந்த அரண்மணையில் நீ ஒருத்தி தான் அழகி என்று நினைத்தேன். உனக்குப் போட் டியாக ஒரு பொற்கொடி யிருப்பது தெரியாமல் போய் விட்டது. விஜயா : யார்? மனோ: [கண்ணாடியில் தெரியும் விஜயாவின் உருவத்தை காட்டி] அதோ! தங்க ரோஜாவிலே வைரப்பனித்துளி களின் சதிராட்டம் இந்தச் சிரிப்பு ! விஐ: அதிருக்கட்டும்! எதிரியின் மகள் நான் ! என்னை தங்கள் தாய் தந்தையர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மனோ: நானும் அப்படித்தான் சந்தேகித்தேன். எதிரி யாயிற்றே நான் என்னை நீ ஏற்றுக்கொள்வாயோ என்று ! விஜ: உங்கள் வீரத்தைக் காதலித்தேன். என் தாய் நாட்டு மண் அதைத் தடுத்தது ! உங்கள் வசீகரத்தில் மயங்கினேன்! அப்பாவின் பாசம் அதற்கு அணை போட்டது. முடிவில் உங்கள் நேர்மையான இருதயம் என்னை ஜெயித்துவிட்டது ! என்ன? மனோ : பேசு கண்ணே பேசு! உன் அமுதூறும் இதழ் கடலின் தோலைகளை கண்கள் எழுதிக் குவிக்கும் காதற் காவியங்களை ரசித்துக்கொண்டே யிருக்கிறேன் இதயராணி இன்னும் கொஞ்சம் பேசு... .. பெசு" - பாட்டு] ["சிங்காரப் பைங்கிளியே ... பெசு [பாடிக்கொண்டு படகில் போகும்போது பௌத்தாயன் கட்டாரியை வீசுகிறான் குறி தவறிவிடுகிறது.) மனோ என்ன ! விஐயா? விஜ: யாரோ கட்டாரியை உங்கள்மீது வீசிவிட்டு ஓடு கிறான் அதோ ! ... மனோ : ஏதோ சூழ்ச்சி நடக்கிறது.நாமும் உடனே புறப்படுவோம் வா!