உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 போராட்டத்திலே ஈடுபட வேண்டாம். நெசவாளி களுக்கான சங்கங்களிலே உறுப்பினர்களாகச் சேர வேண் டாம். அவர்களின் வாழ்வைப் புதுப்பிக்க கைத்தறி ஆடைகளையே உடுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டால் போதுமானது. கைத்தறியாளரின் பரிதாபத் அதைப் போக்க இதுதான் தலை சிறந்த மருந்து. ஆலைகள் வேண்டாமென்று கூறுபவர்களல்ல நாம். விஞ்ஞான வளர்ச்சியை வெறுத்து மனிதனை முழு நேர யந்திரமாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுமல்ல. உலகம் உள்ளவரையில் கைத்தறியும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுமல்ல, மயில் கொண்டு வரப் போகிறோம் வழியிலே ஒரு கிளியை பூனை பிடித்துக் கொல்லப்போகிறது. கிளியைக் காப்பாற்ற முனைகிறோம். கிளியைக் காப்பாற்றுவதால் மயில் வேண்டாமென்று அர்த்தமில்லை, ஆலைகள் வேண்டுமென்கிறோம். கைத்தறிக் கிளியை வடநாட்டுப் பூனைகள் வாட்டுவதைத் தடுக்க முயல்கிறோம், நாம் தேவையென்கிற ஆலை மயில்களும் வட நாட்டுப் பூனைகளுக்கு அடிமைகளாயிருக்கின்றன. ஆகவே அந்த மயில் வேண்டாம், வேறு திராவிடத்தில் சதிராடக்கூடிய நல்ல மயில்கள் வேண்டும்; அது போலக் கிடைக்கும் வரையில் இந்தக் கிளியையாவது காப்பாற்று . வோம் என்று எண்ணுகிறோம். விரும்பிய மயிலே கிடைத்து விட்டது என்றாலும் கிளியைக் கொன்றுவிட முடியுமா என்ன அவைகள் வாழவும் வேறுவழி வகுத்துத் தானே ஆகவேண்டும். அந்த வழி காணத் மாட்டோம். தவற