உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணா நிதி 83 சிவகாமி யோசித்தாள்! போரும். புயலும் மூண்டன! அவள் தாயுள்ளத்திலே சிந்தாமணியை இழந்துவிட அவள் துணியமுடியுமா? அதே நேரத்தில் டைகர் ராமகிருஷ்ணாவை அவளுக்குத் துணைவனாக ஆக்கிடத்தான் சம்மதிக்க முடியுமா? இப் போது சிவகாமிக்கு இருந்த ஆசையெல்லாம், சிந்தா மணியை ஒருமுறை சந்தித்து அவள்மீது சுமத்தப்பட்ட பழியைப்பற்றிய விவரம் அறிய வேண்டுமென்பதுதான்! தன் அன்பு மகளைச் சூழ்ந்திருக்கும் அவதூறு இருளை எப்படியாவது அகற்றிவிடவேண்டும் எனத் துடித்தான் அவள். சிந்தாமணி திரும்பிவந்தால் அந்தப் பழியை ஊரார் மனத்திலேயிருந்து அகற்றிவிடலாம் என்று நம்பி னாள் ள் அவள்! இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் டைகர்தான் காரணமாயிருப்பானோ என்ற சந்தேகமும் எழுந்தது அவ ளுக்கு! டைகருக்கு அவளைத் தருவதாக வாக்களித்து விட்டால், அவன் அவள் மீது-தானே வீண்பழியைச் சுமத் தியதாக ஊர் மக்களிடம் ஒப்புக்கொண்டு தன் மகளைப் புனிதவதியாக மாற்றிவிடுவான். அவள்மீது படிந்த மாசு விலகிவிடும்! வீண் அபவாதம் அழிந்துவிடும் என எண் ணினாள் டைகரோடு சிந்தாமணி வாழ்க்கை நடத்துவதைச் சகித்துக்கொள்ளலாம்; ஆனால், அவள் களங்கமுற்றவள் என்ற பெயரை எப்படிச் சகித்துக்கொள்வது? பெயர் மறையவேண்டுமானால், டைகருக்கு அவளைத் திரு மணம் செய்துகொடுப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந் தாள் சிவகாமி! தாயுள்ளம் அப்படித்தான் தீர்மானிக்க முடியும்! அந்தப் குலதெய்வத்தின் முன்னே சத்தியம் செய்துகொடுக்க சிவகாமி தயாரானாள். சிவநேசரோ கதவைத்தட்டி உடைத் துக்கொண்டு உரக்கக் கூவிக்கொண்டிருந்தார். வீடு அல்லோல கல்லோலப் படுவதும், ஊரார் நகைத் துப் பரிகசிப்பதும் -சிந்தாமணி திரும்பிவந்தால் சரியாகி விடும் என்று அவள் பூரண மாக நம்பிவிட்டாள். அதோடு, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/84&oldid=1708110" இலிருந்து மீள்விக்கப்பட்டது