உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 84 " நானும் வெள்ளிக்கிழமை அதைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன். எதிர்பாராதவிதமாக மலையில் மோதிக்கொண்டு கதிகலங் கிப்போயிருக்கிறோம்; நானும் என் தாயாரும், என் நண் பனும்! அடுத்து எடுக்கி முயற்சியாவது ஆரம்பத் திலேயே மூளியாகாமல் இருக்கவேண்டுமல்லவா?" .. கண் ண ல் கண்டதும் பொய் -- காதால் கேட்டதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் -- என்கிற பழமொழி இருக் கிறதே அதை முழுக்க முழுக்க நம்புகிறவள் நான்! நீங்கள்...? - "சுற்றி வளைத்துப் பேரினால் எப்படிப் புரியும்? சுருக்க மாகவும் கொஞ்சம் பச்சையாகவும் சொல்லிவிட்டால் இரு வருக்குமே குழப்பமிருக்காது என்று கருதுகிறேன்." "எனக்குக் குழப்பமேயில்லை நிச்சயமாக! குத்தான்..."

'

உங்களுக் 'உண்மை-எனக்குக் குழப்பமேதான்! இப்போதல்ல - குழப்பம் போன வெள்ளிக்கிழமையே ஏற்பட்டுவிட்டது! உன் பதில் எப்படியிருக்குமோ என்றுதான் சந்தேகப் பட்டுக்கொண்டு இருக்கிறேன்." "என் பதில் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். உங்கள் வாழ்வில் இன்பம் வழங்குவதாகவே இருக்கும்!" '" உங்கள் வாழ்வு என்று பிரித்துப் பேசுவானேன்? நம் வாழ்வில் என்று கூறலாமே!" ஆனந்தியின் முகம் திடீரென மாறிவிட்டது. அதை அழகப்பனிடம் காட்டிக்கொள்ளாமல் "சரி; டிபனுக்கு நேரமாகிறது. பல் துலக்குங்களேன்!" என்றபடி அதை விட்டு எழுந்தாள். டிபன் சீக்கிரம் வாங்கி வரும்படி வேர்புவை விரட்டினாள். வேம்புவும் போய்விட்டபடியால் தானும் அவளும் தனிமையிலே இருப்பதை இருப்பதை உணர்ந்து தன் எண்ணத்தை எப்படியாவது முழுவதும் வெளிப் படுத்திவிட வேண்டுமென்று துடித்தான் அழகு. "பற் பொடி இருக்கிறதா?” என்று கேட்டபடி ஆனந்தியின் அறைக்குள்ளே எட்டிப் பார்த்தான். அவள், "இதோ,