உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ஏற்றி கண்ட வானமங்கை, விண்மீன்களை விளக்குசளாய் வைத்தாள் கண்ணம்மாவின் விழிகளில் காதலின் ஜோதி கிளம்பிற்று. அந்த ஜோதியிற் கலந்து சொக்கிப் போய்க் கிடந்தான் இன்பசாகரன். சுழற்காற்று ஒன்று மின்வேகத் தீல் சீறியடித்தது. அது, கண்ணம்மாவின் பாதி ஆடையைப் பறித் கீடு காண்டு போய்விட்டது. இன்பசாகரனின் சந் தன வண்ண சால்வை காற்றில் பறந்தது மட்டுமல்ல; அவன் அணிந்திருந்த சட்டையும் கிழிந்து போயிற்று. அந்தக் கிழி சலின் இடை யே அவனது விரிந்து சிவந்த மார்பகத்தைக் கண்டு அகன்மீது தன்னை மறந்து முகம் புதித்துக்கொண் டாள் கண்ணம்மா! அவனது கைகளும் கண்ணர்மாவின் முதுகை அழுத்தி அணைத்துக்கொண்டன. அவளோ அவன் முதுகைத் தடவிப் பார்த்தாள் 22 'ஏன; என் முதுகைத் தடவி என்ன தேடு கிருய்?' எனக் கொஞ்சி முத்தமிட்டான் இன்பசாகரன். 'உங்கள் கற்பகம் சேர்ந்த மார்பில் என் கண் தனம் இரண்டும் தைத்து அப்புறம் உருவிற்றோ என்று அகங் கையால் தடவிப்பார்த்தேன் என்று பழம் பாடல் ஒன்றின் வர்ணனையை அள்ளி வீசினாள் கண்ணம்மா! 33 அது கேட்டு அவளை மேலும் இறுகத் தழுவிக் கொண்டான். இருவரும் இணைந்து மேகத்து மெத்தையில் சாய்ந்து கொண்டனர். இருவரின் உடல் தகிப்பைத் தாங் காத மேகம் களைப்புற்று மழையை வியர்வையாக வடித் துத் தேய்ந்து போயிற்று. மேசு மெத்தை கரைந்து போய் விட்டதால் வானத்திலிருந்து இருவரும் பொத்தெனத் தரையில் விழுந்தனர். கண்ணம்மாவின் இமைகள், திடுக்கெனத் திறந்து கொண்டன. தொலைபேசியின் ரிசீவர், அவள் கன்னத்திலேயே இருந்தது. அந்த இன்பமான நினைவுக்காட்சி நீடிக்கவில் லையே என்ற கவலையுடன் அவள் ரிசீவரை வைத்துவிட்டு, படுக்கையில் உள்ள தலையணையை அனைத்தவாறு புரண்டு படுத்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/19&oldid=1708355" இலிருந்து மீள்விக்கப்பட்டது