உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பி. சீனிவாசன்:-" மத்திய அரசு அந்தக் கோரிக் கையை நிராகரிக்க ஏதாவது காரணங்கள் இருக் கிறதா? என்ன காரணம் சொல்கிறார்கள் ?” முதலமைச்சர் :- "இப்போதுதான் காரணங்களே எதற் கும் கேட்கக்கூடாதே!" தலைவர் அவர்களே ! கடுமையான வறட்சி நேரத்தில் கூட, தமிழகத்தில் உள்ள மொத்தம் 98 இலட்சம் குடும்பங் களில் 52 இலட்சம் குடும்பங்களுக்கு நாம் போதிய அளவு தர முடியாவிட்டாலும், ஓரளவு அரிசியை வழங்க முயற்சிகளை மேற்கொண்டோம்; அதற்கு நாம் எடுத்த நடவடிக்கையாகத் தமிழ்நாடு உணவுப் பொருள வழங்கும் கார்ப்பரேஷன் சார்பி லும்-கூட்டுறவுச் சங்கங்கள் சார்பிலும் உள்ளாட்சி மன்றங் கள் சார்பிலும் நடத்தும் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் 9,926 நிலையங்களின்மூலம் 52 இலட்சம் குடும்பங்களுக்கு - நாம் அரிசி வழங்கும் ஏற்பாட்டைச் செய்து முடித்தோம்! நகர்ப் பகுதியில் ஐநூறு ரூபாய்க்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்குப் பத்து கிலோ அரிசி- சென்னை,கோவை ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வந்தது ; அதை இப்போது இருபது கிலோவாக உயர்த்தியிருக்கிறோம் ; அதோடு மாத்திரமல்லாமல், திருச்சி - சேலம் ஆகிய நகரங் களுக்கும் இந்தத் திட்டத்தை முதல் கட்டமாக நாம் நிறை வேற்றியிருக்கிறோம்! - தலைமையமைச்சர் அறிவித்த முதல் அம்சத்திற்கு நான் அளித்த விளக்கம் நிலமற்றவர்களுக்கு நில விநியோகம் 66 இரண்டாவது அம்சமாக ‘நமது மக்களில் மிகப் பெரும்பாலோர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர்; நில உச்சவரம்புச் சட் டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி--சிலரிடம் உபரியாக இருக்கும் நிலங்களை எடுத்து நிலமற்ற வர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் ; நில உடைமை ஆவணங்களைத் தயாரித்து முடிப் பதில் உள்ளூர் மக்களின் உதவி நமக்குத் தேவை யாகும்" என்பதாகும்.