உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இந்திரா காந்தியுடன் உறவாடிய நேரத்தில், எங்க ளுடைய கொள்கையை இம்மியளவும் விட்டுக்கொடுக்கவில்லை! இந்தித் திணிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லவில்லை! அண்ணா மறைந்த பிறகு திரு சியில் நடைபெற்ற மாநாட்டில்-இந்திரா காந்தியோடு உறவு இருந்த நேரத் தில் - - அண்ணா வழியில் அயராது உழைப்போம்! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் ! ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் ! வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி--மத்தியில் கூட்டாட்சி! என்ற ந்து பெரும் முழக்கங்களை அனைவரும் சேர்ந்து - இன்று பிரிந்து போய் இருக்கின்ற நண்பர்கள் உட்பட் அத் தனைப் பேரும் சேர்ந்து - எழுப்பினோம்! எங்களுடைய கொள்கைகளை நாங்கள் என்றைக்கும் அடகு வைத்தது கிடையாது! காள்கைகளை எண்ணங்களை விமர்சிக்கிறோம்! - - நிலைமைகளைத்தான் ஆகவே, இன்றைய இந்தக் கண்டனத் தீர்மானத்தை நானும் பயன்படுத்திக் கொண்டு, இந்திரா காந்தி அம்மை யாரை இந்த சபையின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்- - ம அவசர நிலை பிரகடனத்தை உடனடியாகத் திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு - 'தேசத் தலைவர்களை விடுதலை செய்யச் சில கட்டுப்பாடுகள் தேவை' என்று பிரதமர் சொல் கிறார்கள்; அதற்கு யாரும் எதிரிகள் அல்லர்; ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவைகள் எல்லாம் தேவைதான்; அதற்கு இந்த அரசு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது-பத்திரிகை யின் நியாயமான சுதந்தரங்களை எல்லாம் தருகின்ற வகை யிலே விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்" என்று! இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகு இந்தக் கண்டனந் தீர்மானம் தேவையில்லை ; அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.