உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 13 கவுண்டர் என்று அழைப்பிதழிலே அச்சிட்டிருக்கிறேன் - முதலமைச்சர் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் இப்போது தான் சாதி பேதங்கள் ஒழிய வேண்டு மென்ற அடிப்படையில் தனக்குப் பிடித்தமான பெயர்களை எல்லாம் கூட மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங் களுக்கும் மாற்றிவிட்டு வந்திருக்கிறார். அவருக்கு ஒத்துழைப்பு தருவதற்கு அடையாளமாக நான் என்னுடைய சாதிப் பெயரை விட்டுவிடுகிறேன். மயில்சாமி என்பதையும் மயிலானந்தம் என்று மாற்றிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். நான் பேசும்போது. கவுண்டரை விட்டுவிட்டார்; மயில்சாமி என்பதையும் மாற்றி ஏன் மயிலானந்தம் என்று வைத்துக் கொண்டார் என்பதைச் சிந்தித்தால், அப்படி பெயர் மாற்றியதில் ஏற்பட்ட ஆனந்தத்தைத் தெரிவிக்கக் கூடிய வகையிலே மயிலானந்தம் என்று மாற்றிக் கொண்டிருக் கிறார் போலும் என்று குறிப்பிட்டேன் அதே கவிதையில், என்கிறார். “எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ அங்கே தோன்றுக கதிரவனே!" குந் வக அப்படிப் பார்த்தால் நான் அதில் ஒருவன் என்று கூறிக்கொள்ள முடியும். பாக்கி இந்த அவையிலே அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியாது. “எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ அங்கே தோன்றுக கதிரவனே என்கிறார். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து பணியாற்றுப வர்களும் இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா விடியற்காலை 3 மணி வரையிலே எழுதி எழுதிக் குவிப்பார். அவர் எழுதியவைகள் எல்லாம் மின்விசிறியில் அறை முழுவதும் பறந்து கொண்டே யிருக்கும். அப்படி பறந்து கொண்டிருக்கும் அந்த தாள்களின் மீதே