உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 75 லாம் எனக்குத் தெரியுமென்று சொல்லி, நான் அந்த ஓவியனுக்கு முன்னால் குட்டுப்பட்ட, அந்தத் தொழிலாளியாக மாற விரும்ப வில்லை என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, எனக்கு எல்லாம் தெரியுமென்று என்னைப் புகழ வேண்டாமென்று நாகசாமியை - நீதியரசரை - அவரைப் போன்ற வர்களையெல்லாம் கேட்டுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன். நம்முடைய தமிழ்நாட்டினுடைய வரலாறு மன்னிக்க வேண்டும் - தமிழ்நாட்டிற்கென்றே ஒரு வரலாறே இல்லை. என்ன இப்படிச் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது. நான் சொல்வதின் உண்மையான பொருள் - தமிழ்நாட்டிற்கென்று வரலாறே எழுதப்படவில்லை தமிழ்நாட்டினுடைய வரலாறு எழுதப்படாததற்குக் காரணம், தமிழ் மன்னர்கள் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்தவர்கள், அந்த மன்னர்களைப் போற்றவும், புகழவும் பாடல்களை இயற்றினார்களே அல்லாமல், வரலாற்றை எழுத வேண்டுமென்று யாரும் எண்ணவில்லை. அதனால்தான் இந்திய நாட்டு வரலாற்றைப் பற்றி வின்சன்ட் ஸ்மித் சொல்லும் போது, இந்திய நாட்டு வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்; கங்கைக் கரையிலிருந்து எழுதப் பட்டது தவறு என்று குறிப்பிட்டார். அதனையே மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களும் எடுத்துச் சொன்னார். ய ற " அதையேதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலே உரையாற்றும் போது 'ஆற்றோ ரம்' என்ற தலைப்பிலே உரையாற்றி இந்திய நாட்டு வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த ஆதங்கம் என்னுடைய உள்ளத்திலே நீண்ட நாட்களாக இருந்த காரணத்தினால், அறிஞர் அண்ணா அவர் களுக்குப் பிறகு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, டாக்டர் மு.வ. போன்ற பெருமக்களையெல்லாம் அழைத்து, தமிழகத்தின் வரலாற்றை நீங்கள் அனைவரும் சேர்ந்து, ஆய்ந்து, சிந்தித்து, தொகுத்து எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.