உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 79 இவரால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது தமிழ்நாட்டிலே உள்ள சில அறிஞர்கள் அல்லது வடபுலத்திலே உள்ள சில அறிஞர்கள் எல்லாம் தென்னகத்திலே குறிப்பாக தமிழகத்திலே இந்த நாணயங்கள் புழக்கத்திலே இல்லை என்கின்ற ஒரு தவறான கருத்தை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்தக் கருத்தை முறியடிக்கும் வகையில் இந்த நாணயங்களை எல்லாம் கண்டுபிடித்து வெளியிட்ட பெருமை நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சாரும் (கைதட்டல்) என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். நூறாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அறிஞன் வால்டர் எலியட் என்பான் தமிழக நாணயவியல் துறைக்குச் செய்த பணி பாராட்டுக்குரிய பணி என்று அனைவரும் போற்றுவார்கள். அந்த வால்டர் எலியட், லண்டன் மாநகரிலிருந்து 1886-ஆம் ஆண்டில் தென்னிந்திய நாணயங்கள் என்னும் நூலை வெளியிட்டார். அந்தச் செய்தி நமக்கு எவ்வளவு செந்தேனாக இனிக்கிறதோ, அதைப் போலத்தான் இன்று கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட இந்த நூலும் நமக்குச் செந்தேனாக இனிக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக் கின்றேன். - அது மாத்திரம் அல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய ஆற்றலால் தட்டச்சு இயந்திரத்திலே தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது உருவாகின்ற நடைமுறைச் சிக்கல்களை யெல்லாம் சீர்படுத்த முனைந்து வரிவடிவ சூத்திரத்தையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். அதையே பயன்படுத்தி 'லைனோ டைப்மெஷின்" என்ற அச்சுக் கோப்பு முறையை அறிமுகப் படுத்தியவரும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் என்பதை எண்ணும் பொழுது நான் அவரை மேலும் மேலும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.