உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 'முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய் இராமனுசனை ஈன்ற தன்றோ?" என்று புரட்சிக் கவிஞர் பாடியிருக்கிறார். லுங்க 117 பக்தி, முக்தி இவைகள் எல்லாம் ஒருசிலருடைய சொத்தாகக் கருதப்பட்ட காலக்கட்டத்தில் அதை பொதுவுடமையாக ஆக்கிய பெருமை - பக்தியைக் கூட பொதுவுடமையாக ஆக்கிக் கொடுத்த பெருமை தமிழகத்திலே ஒருவருக்கு உண்டென்றால், அது இராமானுசருக்குத்தான் உண்டு என்பதை தன்னுடைய கவிதை வாயிலாக எடுத்துக் காட்டியவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ய எனவே நான் இராமானுசரைப் பாராட்டுகின்ற விழாவிற்கு வந்ததைப் பற்றி சிலபேர் ஆச்சரியப்பட்டால் அவர்களுக்கு நான் சொல்கின்ற பதில் - பழைய பதில் ஒன்றுண்டு. நம்முடைய நீதியரச ரும், குழந்தைசாமி அவர்களும், சௌந்தரா அம்மையார் அவர் களும், செல்லப்பன் போன்றவர்களும் அடிக்கடி கலந்து கொள் கின்ற காரைக்குடி கம்பன் விழாவில் நானும் இரண்டொரு முறை அழைக்கப் பட்டிருக்கிறேன் சா.க. என்று அரசியல்வாதிகளாலும், இலக்கியவாதிகளாலும் அன்போடு அழைக்கப்பட்ட காரைக்குடி கம்பனடிப்பொடி எனப்படும் சா. கணேசன் அவர்கள் என்னை அந்த விழாவிற்கு அழைத்திருக்கிறார். நான் அப்படி அழைக்கப்பட்ட போது முதல் நிகழ்ச்சியில் சொன்னேன். “கம்பன் விழாவிற்கு கருணாநிதி வருவது ஆச்சரிய மாக இருக்கிறதே, என்று சில பேர் இங்கே சுவரொட்டி போட்டிருக் கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கின்ற பதில் இதுதான் கம்பன் விழாவிற்கு கருணாநிதி வருவது ஆச்சரியமல்ல; கருணாநிதியை கம்பன் விழாவிற்கு அழைத்திருப்பதுதான் ஆச்சரியம்' - (கைதட் டல்) என்று நான் பதில் சொன்னேன் கம்பனுடைய இலக்கியத்தைப் பற்றி தமிழகத்தில் ஒரு சர்ச்சை எழுந்ததுண்டு அந்தச் சர்ச்சையின் அடிப்படையில்