உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 139 தேன் அண்ணா அவர்களுடைய சட்டப்பேரவை வாக்குறுதியை அடிப்படையாக வைத்து "தமிழை பயிற்று மொழியாக்குகிறோம்" என்று அறிவித்தேன். அதற்கான நடைமுறைகள் எல்லாம் தொடங்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகள், பள்ளிகளின் மாணவர்களும் பெரும் போராட்டத் திலே ஈடுபட்டு தமிழகமே நிலைகுலைந்து போகக்கூடிய சூழ்நிலை உருவாயிற்று. அதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகளும் இருந்தன. பல தலைவர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் யார் யார் என்பது மகாலிங்கம் அவர்களுக்குத் தெரியும். எனவே, நான் இந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்க விரும்பாமல், அதனை வெளியிடாமல் விட்டு விடுகிறேன். அப்போது சிலம்புச் செல்வர் என்னைச் சந்தித்து 'தமிழைக் காப்பாற்றுவது பிறகு இருக்கட்டும். முதலில் ஆட்சியைக் காப்பாற் றுவோம்; ஆட்சியைக் காப்பாற்றினால்தான் எப்போதாவது தமிழைக் காப்பாற்ற முடியும்" என்றார். "என்ன செய்யலாம்" என்று கேட்டேன். அப்போது அவர். ஒரு குழுவை நியமித்து, இந்தத் தமிழ் பயிற்று மொழியைப் பற்றி ஒரு அறிக்கையை அந்தக் குழுவிடம் பெறுங்கள் என்று சொல்லி - அதன் பிறகுதான் ஏ.எல். முதலியாரைக் கொண்ட குழுவை அமைத்து அந்தக் குழுதான் தமிழ் பயிற்று மொழி என்பது கட்டாயமில்லை. யார் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் தமிழை பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு தனிச் சலுகைகள், அவர்களுக்கு சிறப்பு ஆதாயங்கள் கிடைக்கும் என்ற அளவிலே அந்த மொழிப் பிரச்சினை அன்றைய தினம் ஓரளவிற்கு நிதானப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை அன்றைக் குள்ள சூழ்நிலை அல்ல. இன்றைக்கு அவர்கள் இந்த மேடையிலே தமிழை பயிற்றுமொழியாக ஆக்க வேண்டும், ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று சொன்ன நேரத்தில் நீங்கள் எல்லாம் கையொலி எழுப்பினீர்கள் இது ஒரு பெரிய மாற்றம். முன்பெல்