உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 141 மொழியாக இருக்க முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டிலே இருக்கும் பிள்ளைகள் பதவிகள் பெறவேண்டுமே யானால், உத்தியோகம் பெற வேண்டுமேயானால், ஆட்சி மொழி யாக இந்தி மொழியை அல்லது நம்முடைய போராட்டத்தின் காரணமாக இருக்கின்ற ஆங்கில மொழியை இரண்டில் ஒன்றைக் கற்றுத் தீரவேண்டியிருக்கிறது. எனவேதான் நாம் ஒரு மொழிக் கொள்கையை வகுத்திருக்கி றோம். இந்தியாவிலே அரசியல் சட்ட அட்டவணையிலே இருக்கின்ற ஆட்சி மொழிகள் அத்தனையும், தேசிய மொழிகள் அத்தனையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆக வேண்டும்; எல்லா மொழிகளாலும் அந்தத் தகுதியைப் பெற முடியுமா என்று கேட்டால், எல்லா மொழிகளும் பிறகு ஆட்சி மொழிகளாகட்டும்; அதுவரையிலே எல்லாத் தகுதியையும் பெற்ற தமிழ்-ஆட்சி மொழியாகட்டும் என்று கூறுகிறோம் அப்படி ஒரு நிலையை அகில இந்திய அளவிலே - மத்திய அளவிலே ஏற்படுத்தினால் தான் இங்கே நாம் தமிழை இன்னும் வேகமாக ஆட்சி மொழியாக ஆக்குவதிலே பொருள் இருக்க முடியும். அர்த்தம் இருக்க முடியும். அதற்காக ஏதோ அந்தக் கொள்கையிலே நாம் விட்டுக் கொடுத்து விட்டோம் என்றோ, தமிழ் கட்டாயமாக ஆக்கப்படாமல் போய்விடும் என்றோ யாரும் கருதத் தேவையில்லை. தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் தமிழுக்காக என்றே ஒரு தனி அமைச்சகமே, தனி அமைச்சரே இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த அமைச்சகத்தின் சார்பில் தமிழ் வளர்ச்சி, பண்பாடு இவைகள் மாத்திரமல்லாமல், தமிழ் ஆட்சி மொழி ஆவதற்கான அந்த சூழ்நிலையும் படிப்படியாக உறுதியாக இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை நான் திரு.மகாலிங்கம் அவர்களுடைய முறையீட்டிற்கு விளக்க மாக அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ப ஆண்டாள் பிரியதரிசினி ஒரு கோரிக்கை வைத்தார். ஆண்டாளின் கோரிக்கை அரங்கநாதனிடம் எடுபட்டதோ