உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கலைஞர். மு. கருணாநிதி 151 இன்னொரு கண்ணை மூடிக் கொண்டு உறங்கு என்கிறார்களே, இது எவ்வாறு சாத்தியம்" என்று கேட்டார். குக்கும் 'சமூகத் தொண்டு, நாட்டு விடுதலைத் தொண்டு என்பது இரண்டு கண்கள். இதில் சமூகத் தொண்டை நிறுத்திவிட்டு, விடுதலைத் தொண்டை மட்டும் ஆற்று என்கிறார்களே, இது எப்படி சாத்தியம்? ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஒரு கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியுமா? எனவேதான் நான் இந்த இரண்டு தொண்டையும் ஆற்றுகிறேன்" என்று பாரதியார் அன்றைக்குக் குறிப்பிட்டார். இங்கே சாதி மத பேதங்களைப் பற்றியெல்லாம் எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள் பாரதியாருடைய பாட்டு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாட்டிலேயே வெள்ளைக்காரன் ஒரு இந்தியனைப் பார்த்து - நம் நாட்டவனைப் பார்த்து கேட்பதைப் போல - இவன் சுதந்திரத்திற்காக முரசு கொட்டுகிறான்; அவனைப் பார்த்து வெள்ளைக்காரன் கேட்பதைப் போல நையாண்டியாக ஆனால் வேதனையோடு, ஆதங்கத்தோடு பாரதிப் புலவன் பாடிக்காட்டுகிறான். "தொண்டு செய்யும் அடிமை, உனக்கு சுதந்திர நினை வோடா? பண்டு கண்டதுண்டோ? அதற்கு பாத்திரம் ஆவாயோ?" (சுதந்திரத்திற்கு நீ பாத்திரம் ஆவாயோ? என்று கேட்டுவிட்டு அடுத்த வரியிலே பாரதி கேட்கிறார்) 'சாதிச் சண்டை போச்சோ? உங்கள் சமயச் சண்டை போச்சோ?" இந்த இரண்டு சண்டையும் போகாமல் சுதந்திரம் உனக்கு எதற்காக? என்று அன்றைக்கு பாரதி கேட்டார். இன்றைக்கு பாரதி இருந்திருந்தால், இன்றைக்கும் அதையேதான் கேட்டிருப்பார். அந்த நிலையிலே இன்று நாடு இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்