உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 . வழி மேல் விழி வைத்து... இன்றைக்கும் சாதியால், மதத்தால் பேதப்பட்டுக் கிடக்கி றோம். நாம் நம்மை மனிதர்கள், ஒரே குலம் என்று எண்ணுவ தில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அந்தக் கருத்துக்கு நம்மை நாம் இன்னமும் ஆட்படுத்திக் கொள்ளவில்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று என்றைக்கோ சங்கக் காலப் புலவன் கணியன் பூங்குன்றன் பாட - அதை அன்னை இந்திரா காந்தி ரஷ்யாவிற்குச் சென்ற போது அங்கே எடுத்துச் சொல்லி - அவ்வளவு பெருமை பெற்ற வரிகளுக்குரிய தமிழ் இனம் -இந்த இனம் யாதும் ஊரே, யாவரும் கேளிர் (யாவரும் கேளிர் என்றால் எல்லோரும் நம்முடைய உறவினர்கள் என்று பொருள்) சில பேர் அந்த 'கேளிர்' என்பதை கொஞ்சம் நீட்டிச் சொல்லி 'கேளீர் - எல்லோரும் கேளுங்கள் என்று கூடச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அது அல்ல. யாதும் ஊரே, யாவரும் கேளிர் - எல்லோரும் உறவினர்கள்; எல்லாம் நம்முடைய ஊரே; என்ற அந்தக் கருத்துக்குச் சொந்தக்கார இனம் நம்முடைய இனம். - ஆனால் இன்றைக்கு வெட்டிக் கொண்டு சாகிறோம்; சுட்டுக் கொண்டு சாகிறோம். வீடுகள் எரிக்கப்படுகின்றன; மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். மதவெறியால், சாதி வெறியால் என்றெல்லாம் பார்க்கும் போது சுதந்திரப் பொன்விழா இன்னமும் பொன் விழாவாக ஆகாமல், புண் விழாவாக இருக்கிறதே என்பதை எண்ணிப் பார்த்து - பாரதியின் பணி இன்னமும் தேவை; பாரதியின் பாட்டு இன்னமும் தேவை; பாரதியின் சேவை இன்னமும் தேவை; பாரதியைப் போன்ற உள்ளம் நமக்கெல்லாம் தேவை என்பதை இந்த பாரதி விழாவிலே எடுத்துரைத்து என் உரையை நிறைவு செய்கிறேன். முரசொலி 12.9.97