உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருந்தது. அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் பள்ளிக் கூடத்திலிருத்த என்னைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினார். அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன். அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார். 'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து விட்டு, கைராட்டையால் நாடு முன்னேறும் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இந்தக் கையெழுத்துப் பத்திரிகையும்" என்று மதிப்புரை எழுதிக் கொடுத்தார். மாணவர்கள் நடத்தும் கையெழுத்து ஏட்டால் நாடு ஒரேயடியாக முன்னேறி விடும் என்று யாரும் கூறவில்லை. சிறுதுளி பெருவெள்ளம். பலர் சேர்ந்ததே நாடு. அந்த நாட்டின் எதிர்காலத்திற்குரியவர்கள் மாணவர்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள மெருகேற்றிக்கொள்ளக் கையெழுத்துப் பிரதிகள் நல்ல வாய்ப்பு அளிக்கின்றன என்பதே என் நம்பிக்கை. இளமைப் பருவத்தில் எழுதுகின்றவைகளைப் பெரிய பத்திரிகைகள் எடுத்துக் கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைக்கு எழுதுவது போன்ற தகுதியைக் கையெழுத்துப் பிரதியில் ஏற்படும் பயிற்சி தாராளமாகத் தருகிறது என்பேன். ஆனால் ஒன்று, எல்லோரும் கையெழுத்துப் பிரதி என்ற பெயரால் பொங்கல் மலர்போல ஒன்று தயாரித்து விடுகிறார்கள். நான் பள்ளியில் நடத்திய கையெழுத்து ஏடுகளை ஒரு சமயம் ஒருவர்தான் படிக்க முடியும். நான் நடத்திய ஏடு மாதத்திற்கு இரண்டு வெளியீடு. ஒவ்வொரு வெளியீட்டிலும் எட்டு பக்கங்கள். பிரதிகளோ ஐம்பதுக்கும் குறை யாது. ஐம்பது பிரதிகளையும் நானும் சில நண்பர்களும் மட்டுமே உட் கார்ந்து காப்பி எடுப்போம். டெம்மி பேப்பர் செலவை மட்டும் வசூல் செய்து கொள்வோம். உழைப்பும் கட்டுரைகளும் இனாம்! தடை இந்த ரீதியில் 'மாணவ நேசன்' ஏழெட்டு மாதங்கள் பெற்றது. இப்படி ஐம்பது பிரதிகள் கையாலேயே எழுதி வழங்குவது சிரமமாயிருக்கிறதே வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தான் 'முரசொலி' தோன்றியது. வாரப் பத்திரிகை. மாதப் பத்திரிகை என்ற அளவிலே அல்ல. துண்டு வெளியீடுகளாக! 50