உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டிற்குள் சென்ற நான் தொடர்ந்து வந்த கூட்டத்தினர் என்னைப் பிடித்துவிடாமலிருக்கக் கதவைச் சாத்தினேன். அதற்குள் கூட்டத்தினர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். நான் கதவிடுக்கின் மறைவில் நின்று கொண்டு அந்த வீட்டை ஒரு முறை பார்த்தேன். தாழ்வாரத்திலும் கூடத்திலும் மதுப் புட்டிகள் இறைந்து கிடந்தன. காலி செய்யப்பட்ட புட்டிகளும், காலி செய்யப்படாத புட்டி களும் ஏராளமாக இருந்தன. அந்த வீடுதான்-கலகக்காரர்கள் சதித் திட்டம் தீட்டிய இடம் என்பதைப் பிறகு புரிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தவர்கள் கதவின் மறைவில் இருந்த என் தலைமயிரைப் பிடித் திழுத்துத் தெருப்புறத்தில் தள்ளினார்கள். ‘க்யூ' வரிசையில் நிற்பது போல நின்று கொண்டிருந்த கலகக்காரர்கள் ஆளுக்கொரு அடி என்னை அடித்தார்கள். நான் மயக்கமுற்றேன். சுருண்டு விழுந்தேன். நான் இறந்து விட்டதாகக் கருதி, சாக்கடை ஓரத்தில் தூக்கியெறிந்துவிட்டுப் போய் விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நான் கண் விழித்துப் பார்த்தேன். எங்கேயோ வீட்டுத் தாழ்வாரத்தில் நான் படுக்க வைக்கப்பட்டிருந்தேன். முதிர்ந்த ஒரு தாயும் ஒரு சிறுமியும் ஓர் இளைஞனும் என் அருகே இருந்தார்கள். நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் தாய் சொன்ன வார்த்தை என் நெஞ்சில் அப்படியே பதிந்து விட்டது. "ஐயோ, யார் பெற்ற பிள்ளையோ! இப்படிச் சாகக் கிடக்கிறதே?' என்பதுதான் அந்தத் தாயின் வாயிலிருந்து வந்த கனிவு மிக்க வாசகம். நீண்ட நாள் வரை தேடிக் கொண்டிருந்தேன்; புதுவையில் எனக்கு உயிரளித்த அந்த நல்லவர்கள் யாரென்று. அதற்குப் பிறகு நான் அவர்களை இரண்டொரு முறைச் சந்தித்தேன் தஞ்சை மா வட்டத்தைச்சேர்ந்த குடும்பத்தினர் என்பது மட்டும் எனக்குத் தெரியும். இதற்கிடையில் காலையில் கலைக்கப்பட்ட கழக மாநாடு மீண்டும் மாலையில் கூட்டப்பட்டு அழகிரிசாமி அந்த மாநாட்டில் கலந்து கொண் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன வாசகம்தான், "காலையில் சில கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப் பட்டேன் - நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப் பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்" என்பதாகும். என்னுடைய நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் தலைவர்கள் ஊரெல்லாம் ஆள் அனுப்பித் தேடியிருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் துடித்துப்போயினர். விடியற்காலை நாலு மணிக்கு தலைவர்கள் தங்கியிருக்கும் இடம் கெரிந்து 91