உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிறைச்சாலை விதிகள் சிறைச்சாலை ஒரு கிராமம் போலவே எல்லா வசதிகளும் உடையது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? சலவைச்சாலை உண்டு; தொழிற்சாலை உண்டு; பள்ளிக்கூடம் உண்டு; தோட்டங்கள் உண்டு என்றெல்லாம் படித்தீர்கள் அல்லவா? அவைகளைப் பற்றி முதலில் விளக்குகிறேன். சலவைச்சாலை இருக்கிறது என்பது உண்மைதான். என்றுதானே சலவைச்சாலை என்றதும் எல்லாக் கைதிகளும் தங்கள் உடைகளைப் போட்டு அடிக்கடி சலவை செய்து கொள்ளலாம் நினைக்கிறீர்கள்? அதுதான் தப்பு! சினிமாப் படத்திலே சலவைசாலையொன்றைக் காட்டி, அதிலே ஏராளமான துணிகளையும் வெளுக்கிறார்கள் என்பதைக் காட்டும் போது, எப்படி நாம் பார்த்துக் கொண்டிருக்கலாமோ அதுபோலத் தான் சிறையிலுள்ள சலவைச் சாலையையும் பார்த்து ரசிக்கலாம். அங்கே எல்லாக் கைதிகளின் ஆடைகளையும் சலவை செய்ய மாட்டார்கள். கான்விக்ட் வார்டர்களின் உடைகள், மருத்துவ மனைத் துணிகள், 'பி' வகுப்புக் கைதிகளின் உடைகள் ஆகியவற்றைத்தான் சலவை செய்து கொடுப்பார்கள். இந்தக் குறையைக் களைய ஏற்பாடு நடைபெறுகிறது இப்போது! தொழிற்சாலையிருக்கிறது. திருச்சி சிறையைப் பொறுத்த வரையிலே நெசவுத் தொழில் முக்கியமானது. ஒவ்வொரு கைதியும் நாளொன்றுக்கு இத்தனை கஜம் தர வேண்டுமென்று உத்தரவு போடப்படுகிறது. திருச்சியில் தயாராகும் மருத்துவமனைக்குத் தேவையான 'பேண்டேஜ்' துணிகள் பெரும்பாலும் திருச்சி சிறைக்கு மட்டுமின்றி, மாகாணமெங்குமுள்ள சிறைகளுக்கும் அரசாங்க மருத்துவ மனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது போலவே மாகாணமெங்கும் உள்ள சிறைகளில் முக்கியமான பொருள்கள் கைதிகளின் உழைப்பைக் கொண்டே தயாரிக்கப்படு கின்றன. சேலம் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் இரும்புச் சாமான் களும், பெரிய பாத்திரங்களும், அலுமினியம் தட்டு - குவளை ளும் மாநிலத்தில் உள்ள எல்லாச் சிறைகளுக்கும் உபயோக 227