உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 குளித்தலையில் தேர்தல் பணி கழகத்தின் ஆணையினைச் சிரமேல் ஏற்றுத் தேர்தல் பணி தொடங்கிட என் குழுவினருடன் குளித்தலை புறப்பட்டேன். என்னிடமிருந்த 1335 எண்ணுள்ள பியட் கார், 'முரசொலி' அலுவலகத்திலிருந்து ஒரு பழைய வேன், அச்சடிக்கப்பட்ட வேண்டுகோள் அடங்கிய துண்டுத் தாள், ஒரு டேப்ரிக்கார்டர் இவைதான் சாதனங்கள். லாலாப் காரி திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர் போன்ற ஊர்களைக் லோ, ரயிலிலோ, பயணம் செய்தவாறு பார்த்தவர்கள் காவிரியின் கவின் மிகுந்த காட்சியினையும், பசுமை கொஞ்சும் செந்நெற் கழனி களையும் கண்டு, தொகுதி கருணா நிதிக்குக் கிடைத்தது என்று தான் கருதினார்கள். ஆனால்,குளித்தலை தொகுதி யில் வெள்ளியணை என்ற பகுதியும் சேர்க்கப்பட்டிருந்ததும், அது எவ்வளவு வளமான எவ்வளவு பிற்போக்கான நிலையில் அதுவரை ஆண்டவர்களால் வைக்கப்பட்டிருந்தது என்பதும் அங்கு போய் நேரடியாகப் பார்த்தவர் களுக்கே புரியும். காண மிகக் குறைவான கழகக் கிளைகள்; கழகக் கருத்துக்கள் பரவிட இயலாத பல சிற்றூர்கள்; கழகக் கொடி பறக்கக் முடியாத இடங்களே அதிகம். சிற்சில ஊர்களில் இருந்த திராவிடர் கழகத் தாரும் ஆதரிக்க முடியாத நிலை. துணிச்சலோடு தான் குளித்தலைத் தொகுதியில் நுழைந்தேன். பராங்குசமும், பண்ணையும், கவிஞர் ஆனந்தமும், தென்னனும் அலுவலகப் பணிகளைக் கவனித்தனர். நிழல் போல் நீங்காமலிருந்து வாக்குச் சேகரிக்க உதவியவர்கள் முத்துக்கிருஷ்ணன், இளமுருகு, பொற் செல்வி, மற்றும் முத்து, முத்துசாமி, கிருஷ்ணன், சிவராஜ் ஆகியோர். நான் காலைச் சிற்றுண்டி முடித்ததும் குளித்தலையை விட்டு, சண்முக வடிவேல் ஓட்டிட என் பியட் கார் புறப்படும். மதிய உணவு, ஏதாவது மசால் வடை, ரொட்டி, தேநீர்! இரவு பொதுக் கூட்டமெல்லாம் முடிவு பெற்றுக் குளித்தலை திரும்பிட அதிகாலை இரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். குகள் வெள்ளியணையில் இரண்டு முறை மேடை போட்டு, அமைத்து, ஒலிபெருக்கியும் ஏற்பாடு செய்து விளக் பார்த் 286