உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருவதைக் கண்டிக்கும் வகையில் தமிழ் மக்களின் அருவருப்பைக் காட்டிட, வரும் ஜனவரி முதல் வாரம், நேரு பண்டிதர் சென்னை வரும் போது, அவருக்குக் கறுப்புக்கொடி காட்டுவது என்றும், அந்நிகழ்ச்சி யினைச் சென்னைச் சட்ட மன்றத்தில் உள்ள தி.மு.க. உறுப்பினர் பதினைந்து பேரும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் முன்னின்று நடத்துவதென்றும் தீர்மானிக்கிறது" என்பது. தமிழகத்தின் தன்மானத்தில் அக்கறை கொண்ட அனைவரையும்' அந்தத் தீர்மானம் அன்போடு அழைத்தது. தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துத் திருவண்ணா மலை மாநாடு குரல் கொடுத்தது. அதற்கடுத்து நாகர் கோவில் மாநாடு, தமிழகத்திற்கு நேர்ந்த அவமதிப்பைத் துடைத்தெறிய முடிவு எடுத்தது. தமிழகம் அநீதியைக் காட்டிலும் அவமதிப்பைத் தாங்கிக் கொள்வதில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுத்ததில்லை. சேரன் செங்குட்டுவன் வீரப்படையெடுப்பிலிருந்து, நேருவின் ஏளனப் பேச்சை எதிர்த்துக் கண்டிக்கக் கழகம் முடிவெடுத்தது வரை தமிழகத்தின் போராட்டங்களில் அவமதிப்பை எதிர்ப்பதுதான் அதிகமானதாக இருக்கும் என்பது வரலாறு. அடிமைத்தனத்தைக் கூடத் தமிழகம் பொறுமையோடு சகித்ததுண்டு. அவமானத்தை அது சகித்துக் கொண்டது என்பதற்குச் சான்றுகளே கிடையாது. வீரபாண்டியக் கட்டபொம்மன் கூட, அடிமைத்தனத்தால் அவ்வளவு விரைவாகச் சூடேறிப் பொருதவில்லை! அவமானப்படுத்தப் பட்டது தான் அவன் பீரிட்டுக் கிளம்பியதற்கு முக்கியக் காரணம். கனகவிசயன் அவமானப்படுத்திய காரணத்திற்காக இமயம் வரை தமிழன் படை கொண்டு சென்றான். நேரு ஏற்படுத்திய அவமானத் திற்குப் பரிகாரம் சென்னையிலேயே தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது; ஏனென்றால், ஜனவரி 6-ஆம் நாளன்று பண்டித நேரு அவர்கள் சென்னைக்கு வருவதாகப் பயணத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஜனவரி 6-ல் சென்னை வரும் நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டுவதன் 336