உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டடிப் பகுதிக்குத் தான் நாமும் கொண்டு கிறோம்' என்று எண்ணிய மாத்திரத்தில் உடல் புல்லரித்தது. என் வந்து சேர்க்கப்பட்டிருக் உள்ளம் பூரித்தது; முன்பொரு சமயம் வெள்ளையர் ஆண்டிட்ட காலத்தில் பெரிய மதனிர்களுக்குரிய மத்தியச் சிறையாக விளங்கிய அந்த பகுதிப் பின்னர் பதினெட்டு வயதுக்குக் குறைந்த இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப் பள்ளியாக மாற்றப்பட்டுவிட்டது. சிறுவர்களுக்கான சிறைச்சாலை என்பதால் அங்கே விளையாட்டு அரங்கங்களும் உண்டு; கொட்டடிக் கதவுகளும் திறந்தே இருக்கும். ஆனால், என்னைக் கைதியாக அடைத்துவிட்ட பின்னரோ, அந்தச் சிறுவர் சிறைச்சாலையின் திறந்திருந்த கதவுகளும்கூட மமதையாளர்களின் உதடுகளைப் போல இறுக்கி மூடிக்கொண்டு விட்டன கடுமையான காவலுடன். நெல்லை-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையிலே தனிமைத் தணலிலே தள்ளப்பட்ட எனக்கு உடல் நலமும் உருக்குலைந்த வண்ணமே இருந்தது. நாள்தோறும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். உடல் நோயைவிட நமக்குத் தெரிந்த முகங்களையே காண முடியவில்லையே என்கிற உள்ள நோய்தான் தொல்லைப்படுத்தியது மிகுதியாக. ஐந்தாவது நாள் வழக்கறிஞர் திரு நாராயணசாமி முதலியார ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி), திரு இரத்தினவேல் பாண்டியன் (இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் என்னைச் சந்திக்க வந்தனர். பாளைச் சிரிப்பு- பார்ப்பதற்கு அழகானது; பளபளப்பாய் - பல அடுக்கு மணிச்சரமாய் -ஒளி வீசுவது! நான் இருந்த- 572 11