உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலங்கிடும் வண்ணம் 'கழக வளர்ச்சியை அரசினர் கண்டு பேச்சாலும், எழுத்தாலும் பணியாற்றியதற்காகக் கழகம் என்ன விதத் தில் நன்றியைத் தனது கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வது? அடைக்கப்பட்டுள்ள ஒன்று இருக்கிறது; கற்கோட்டையுள் கருணாநிதிக்குக் கழகத் தோழர்கள் காட்டக்கூடிய நன்றியறிவிப்பு. தருமபுரித் தேர்தலில் கழகம் வெற்றி பெற வேண்டும். அந்தச் செய்தி செந்தேனாகி எத்துணை கொடுமை நிறைந்த தனிமைச் சிறையினையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக ஆக்கிடும். அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதைவிட அடக்கு முறையால் தாக்கப்பட்டு நம்மிட சிறையில் பாஞ்சாலங்குறிச்சிச் மிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைச் சீமையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. 'சிறைக் கோட்டம் தள்ளப்படும் இலட்சியவாதிகளோ உறுதி பன்மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல; தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம் பற்றிய எண்ணம் - இவைகளைக் கூட மறந்துவிடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப்பற்றிய எண்ணம் எழுப்பிவிடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவும், ஒரு

பற்றியே

துறவு நிலையைப் பெற்றளிக்கிறது சிறைச்சாலை; இது ஆன்றோர் சிறைச் சாலையை அறச்சாலை என்றனர். 'பாளையங்கோட்டைச் சிறை வாயிலில் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை; 'அங்குப் பொறிக்கப்பட்டிருப்பது என்ன? 'தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!' கண்டேன், இந்தப் மணிகளை மனக் 'காஞ்சி' இதழில் அண்ணாவின் இந்தக் கருத்து கண்டதும் என் நெஞ்சம் விம்மிற்று. பெருமிதத்தால், பாளைச் சிறை வந்து என்னைப் பார்த்து விட்டுத் திரும்பிய அண்ணாவின் கேணியில் என் மீதான பரிவுணர்ச்சி எந்த அளவுக்கு ஊற்றெடுத்து வழிந்துள்ளது என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என் விழிகள் குளமாயின. என்னைப் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 30(1) பிரிவின்படி பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைத்திட்ட அளவிலேயே காங்கிரஸ் ஆட்சியாளரின் அடக்கு முறைப் பசி அடங்கிடவில்லை. 'முரசொலி'யில் வெளியான சில கட்டுரைகள், படங்கள் ஆகிய வற்றைக் காரணம் காட்டி, அதே பாதுகாப்புச் சட்டம் 41 (5)- பிரிவின் படியும் என் மீது வேறொரு வழக்கினையும் தொடுத்தனர். அதன் விசாரணையை முன்னிட்டுப் பாளையங்கோட்டையிலிருந்து கைதியாகவே என்னைச் சென் னைக்குக் கொண்டு சென்றனர்.