உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அதிர்ச்சியூட்டும் செய்தி 66 "அன்புள்ள திருமதி அண்ணாதுரை அவர்களுக்கு, தான் உங்களையும் திரு. அண்ணாதுரை அவர்களையும் நியூயார்க்கில் சந்தித்தபோது அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றிருந்தது. அதுகுறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்று நான் உண்மையாகவே நம்பினேன். அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்ற அந்த இறுதி நாட்களில் எனது சிந்தனைகள் யாவும் உங்களிடமே இருந்தன. உங்களுடைய கவலையில் நாங்களும் பங்கு கொண்டோம். அவர் கடுமையாக நோயுற்றிருந்தபோதிலும் அவர் உயிர்நீத்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால் உங்களுடைய துக்கம் அளவிடற்பாலது என்பதை நானறிவேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." ராணி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் அண்ணியார் அவர்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதித் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டது மட்டுமல்ல; பிப்ரவரி 8-ஆம் நாளன்று சென்னைக்கு வந்தபோது அண்ணா வின் நுங்கம்பாக்கம் இல்லத்திற்குச் சென்று அண்ணியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அன்று மாலை ஆளுநர் உஜ்ஜல்சிங் அவர்கள் தலைமை யில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரங்கற் பொதுக் கீழவெண்மணி