உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 221 அந்த உறுதிமொழிக்கேற்ப 2-12-70-ல் சட்டப் பேரவை யில் "அர்ச்சகர் சட்டம்” கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. இந்து சமய அறக்கட்டளைத் திருத்த மசோதா என்ற பெயரால் விவாதிக்கப்பட்டு நிறைவேறிய அந்தச் சட்ட முன்வடிவை ஆதரித்துப் பேரவையில் பேரவையில் காங்கிரஸ் கட்சித் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும், மேலவையில் குன்றக்குடி அடிகளார் அவர்களும் பேசியது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல! அந்தச் சட்ட முன்வடிவின் அறிமுகம் கண்டு ஐயத்திற்கு ஆளாகியிருந்த சிலருக்கு ஐயம் போக்கும் வகையிலும் அமைந்தது எனலாம். அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெருமகனும் கர்ப்பக் கிரகத்தில் நுழைந்து ஆண்டவனை பூஜை செய்யலாம்-என்ற உரிமையை வழங்கும் அந்தச் சட்டத்தைப் புரட்சிகரமான சட்டம் என சமத்துவம் விரும்பிடும் சான்றோர் அனைவரும் பாராட்டினர். ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டுமென்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனி கள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப் பார்களா? அதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கள். 12 ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத்திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் 'ரிட்' மனுக்கள் அளித்திருந்தனர். அந்த வழக்கில் 1972-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோபில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறு பாடற்ற நடவடிக்கை. அந்த நடிவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப் படும் இந்தச் சட்டம், மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ