உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நெஞ்சுக்கு நீதி விதமான அண்ணனின் திரு உருவங்களை ஏந்தி வந்தார்கள் தெரியுமா? அண்ணன் இருந்திருந்தால், அன்று மதுரை மாநாட்டு ஊர்வலத்தை அல்ஜீரிய அணிவகுப்பிற்கு ஒப்பிட்ட வர் இந்த ஊர்வலத்திற்கு என்ன உவமை கூறிடுவார் எண்ணத்தக்க விதத்திலே திருச்சியின் எழுச்சிமிகு ஊர்வலம் அமைந்திருந்தது!" என்று கொண்ட ஆனால் ஒன்று, அந்த எழிலும் எழுச்சியும் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நான் ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பிப் பிழைத்தேன். ஊர்வலத்தில் தலைவர்கள் அமர்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம், திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக இருந்தது. அதில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஊர்வலத்தின் முகப்பு கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் தெரியவில்லை. ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு முன்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அன்பிலும், பராங்குசமும், எம். எஸ். மணியும், ராபியும் அழைத்துச் சென்றார்கள், சிலையை யொட்டி வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகளில் ஏறி, சிலையருகே நின்று கொண்டு மிகப்பெரிய மாலையொன்றை அண்ணா சிலையின் கழுத்தில் அணிவித்தேன். ஒரு இமைப் என்னைக் கீழே தள்ளிக் கொள்ளும் திடீர் படாமல் இருந்திருந்தால் அண்ணாவின் தழுவியபடி பிணமாக ஆகியிருப்பேன். பொழுது நானே முயற்சியில் ஈடு சிலையைக் கட்டித் மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள். மிக நுண்ணிய மின் கம்பிகள் அந்தச் சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரம் நிறைந்த மாலையை அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான ஷாக்" அடித்து என்னை மிக வேகமாக இழுத்திருக்கிறது. ஒருக்கணத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டதால் மல்லாந்த படியே அந்தப் பீடத்திலிருந்து கீழே சாய்ந்தேன். ஏதோ ஆபத்து நடந்துவிட்டது என்ற திகிலோடு பராங்குசமும் குளித்தலை முத்துகிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் என்னை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அந்த ஒரு கால் விநாடிக்கும் குறைவான நேரம்- நான் மட்டும் சமாளித்திருக்காவிட்டால் என் ஆருயிர் அண்ணனின் சிலையைக் கட்டிப்பிடித்தவாறே அமைதி அடைந்திருப்பேன்! என்ன செய்வது; அது மட்டும் அன்றைக்கு நடந்திருந்தால்