உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 309 பிரபுக்களும் அவ்வாறு தங்களுக்கு வசதியாக எழுதி வைத்துக் கொண்டபிறகு 1960-ஆம் ஆண்டு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1959-ல் அவசர அவரமாக என்ன நடந்தது என்பதற்குச் சில உதாரணங்கள் தர விரும்புகிறேன். 1959 வரையில் கபிஸ்தலம்' பண்ணையின் நில அளவு மொத்தம் 2,028 ஏக்கர்! அதில் 1,464 ஏக்கரா பிரித்துப் பிரித்து விற்பனை செய்யப்பட்டு விடுகிறது! மிச்சத்தில் 389 ஏக்கர், தரிசு நிலம் என்று அறிவிக்கப்பட்டு விடுகிறது! 125 ஏக்கர் அறக் கட்டளையென அறிவிக்கப்படுகிறது! எனவே 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டப்படி அந்தப் பண்ணையிலிருந்து அரசுக்கு உபரியாகக் கிடைப்பது நான்கு ஏக்கர் 84 சென்ட் மட்டுமே! அடுத்தது பூண்டிப் பண்ணையார்-மொத்த நிலம் 467 ஏக்கர்! 1959 இறுதியிலேயே 295 ஏக்கர் நிலம் பிரித்து விற்கப்பட்டு விடுகிறது. 134 ஏக்கர் வீட்டில் பாகம் செய்து கொள்ளப் படுகிறது. அதே பண்ணையில் இன்னொருவரின் மொத்த நிலம் 385 ஏக்கர்! அதில் 307 ஏக்கர் முன் எச்சரிக்கையாக விற்கப்பட்டு விடுகிறது! அதே பண்ணையில் இன்னொருவரின் மொத்த நிலம் 625 ஏக்கரில் 1959-ஆம் ஆண்டுக்குள் 552 ஏக்கர் விற்பனை செய்யப் பட்டு விடுகிறது! அதே பண்ணையில் மற்றொருவரின் மொத்த நிலம் 298 ஏக்கரில் 197 ஏக்கர் நிலம் முன் கூட்டியே விற்கப்பட்டு விடுகிறது. அதே பண்ணையில் பிறிதொருவரின் மொத்த நிலம் 498 ஏக்கரில் 468 ஏக்கர் நிலம் சட்டம் வருவதற்கு நான்கு மாதங் களுக்கு முன்பு விற்கப்பட்டு விடுகிறது. அதே பண்ணையில் மற்றொருவரின் மொத்த நிலம் 699 ஏக்கரில் 629 ஏக்கர் முன்கூட்டியே விற்கப்பட்டு விடுகிறது! மற்றும் ஒருவரின் நிலம் 446 ஏக்கரில் 256 ஏக்கர் விற்பனை! 100 ஏக்கர் பாகப் பிரிவினை! அந்தப் பண்ணையில் மட்டும் ஆக மொத்தம் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தில் 1959 இறுதியில் சட்டம் வரப்போவதை அறிந்து