உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி347 சுற்றியலைந்த கண்களுக்கு முன் அதோ வருகிறார்! அதோ அருகில் வந்துவிட்டார்! போலீஸ் அதிகாரிகள் அவரை என் அருகில் அழைத்துவர உதவினார்கள்! ஆமாம்! கலைஞர் கருணாநிதி யின் உருவில் அண்ணா என்னை தேடி வந்தார்! கலைஞர் வந்தார்! அண்ணாவைப்போல் என்னைவிட வயதில் மூத்தவரில்லாவிடினும் அண்ணாவுக்குரிய தகுதியைப் பெற்ற கலைஞர் மாலையை என் கழுத்தில் அணிவித்தார். நான் உணர்ச்சிவயப்பட்டிருந்தபோதே அவர் தன்னைச் சமாளித்துக்கொண்டு அதிகாரிகளுக்குக் வண்டியை செல்லும்படி! நான் கட்டளையிட்டார்; நேராக விமானத்திற்கு அருகில் கொண்டு 'வேனில்' ஏற்றப்பட்டேன். வண்டி நகர்ந்தது. "கலைஞர் அண்ணா" விடம் ஏதேதோ பேசவேண்டுமென்று விரும்பினேன். இயலவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடும் வேதனையோடும் விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். தூரத்தில் அண்ணன் திரு. எம்.ஜி.சி. மற்றும் பல பெரிய வர்கள், அன்பர்கள், தோழர்கள் இருந்தனர். எல்லோரிடமும் சென்று என் வணக்கத்தைச் சொல்ல ஆசைப்பட்டேன்: இயல வில்லை. விமானத்தின் உள்ளே சென்று அயர்ந்து உட்கார்ந் தேன். பெருத்த ஏமாற்றம்! திடீரென வெளியே இருந்து போலீஸ் அதிகாரிகள் சிலர் விமானத்திற்குள் வந்தனர். கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா மீண்டும் என்னைத் தேடி வந்தார். என்னை ஆரத் தழுவினார். எங்கள் இருவர் கண்களிலும் நீர் மல்கின. நான் புறப்படுவதைப் பற்றி அவரிடம் பேசியதுண்டு. ஆனால் குறிப்பிட்ட தேதியில் நான் புறப்பட இருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லவே இல்லை. முன்பு பேரறிஞரிடமும் இப்படித்தான் செய்தேன். அவரும் வந்தார். இப்போது இவரும் வந்தார். நான் சுமார் ஏழுவயதுப் பையனாக இருக்கும்போது என் தாயிடமிருந்து முதன் முதலாகப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேருவதற்காகப் புறப்பட்ட நாளன்று வாயிற்படிவரை நாங்கள் (நானும் என் சகோதரரும்) வருவதும், உடனே ஓடி கூடத்தில்