உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 நெஞ்சுக்கு நீதி வணக்கம் தெரிவித்துக் கொண்டதல்லாமல் ஒரு நிமிட நேரமாவது அவருடன் பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை. தி.மு. கழகத்தில் அவருக்கு சம்பந்தம் ஏற்பட்ட பிறகு தான் அவர் அரசியல் வாழ்வில் பிரஸ்தாபிக்கப்படும் தன்மையை அடைந்தார். அண்ணா இருந்த போது அவருக்கு இருந்த பெருமையை விட அண்ணாவிற்குப் பிறகு அதிக பெருமை, பிரபலம் அவருக்கு ஏற்பட்டது. அவருக்கு இருப்பதாகச் 'இன்கம்டாக்ஸ்' விஷயமாய் தொல்லை சங்கடம் இ துடன், அதனால் அவருக்கு மனச் சங்கடம் இருப்பதாகவும், அதற்குப் பரிகாரம் தேடுவதில் அதிக கவனமாகவும் முயற்சியாகவும் இருக்கிறார் என்றும் சொல்லப் பட்டு வந்தது. இந்த நிலையின் மூலபக & அவருக்கு மனக்- குழப்பமும் பல யோசனைகளும் தோன்றுவது இயற்கையே ஆகும். அதன் பயன் தான் இன்றைய அவருடைய குழப்ப நிலைக்குக் காரணம் என்பது எனது கருத்து. விட்டால் நான் அவரை அழைத்துக் கேட்டுக் கொண்டதற்கு அப்படியில்லா ஒரு பதிலும் தெரிவிக்காமல் யோசிக்கிறேன், யோசித்துச் சொல்லுகிறேன் என்று சொல்லவும் எனது கருத்தை அலட்சியப் படுத்தவும் அவர் துணிந்திருக்க மாட்டார்." பெரியார் அவர்கள் தெரிவித்த இந்கருத்துகளுக்குப் பிறகு, திராவிடர் இயக்கத்தின் தேவையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் தெளிவு பெற்றார்கள். எனினும், கட்சியில் இருந்த சில அதிருப்தியாளர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள எம். ஜி. ஆர். பெரு முயற்சி செய்தார். அதன் விளைவாகச் சட்டப் பேரவைத் தலைவராக இருந்த அருமை நண்பர் மதியழகன் அவர்க எதிராகப் போர்க்கொடி தூக்கினார். கழகத்திற்கு தலைவர் அவர் கழகத்திலிருந்தும், சட்டப் பேரவைத் பதவியிலிருந்தும் விலகிவிட விரும்பினார். ஆனால் எம்.ஜி.ஆரும், மோகன். குமாரமங்கலம் அவர்கள் தயாரித்து அனுப்பியிருந்த நண்பர்களும் மதியழகனை சுற்றி வளைத்துக் கொண்டு-சட்டப் பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகாமல் கொண்டே, சட்டமன்றத்தில் ஆளுங் கட்சியான தி.மு.க. இருளது எதிராகச் செயல்பட வேண்டுமெனத் தூண்டி விட்டார்கள். வுக்கு