உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி397 சபாநாயகரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்ட காரணத் தால் சபையின் விதிமுறைகளை அவருடன் சேர்ந்து துவைத்துத் துவம்சம் செய்வது எம்.ஜி.ஆருக்குச் சுலபமாக இருந்தது. சுவையாகவும் இருந்தது அவருக்கு! திராவிடர் இயக்கத்தில் இப்படியொரு விரிசல் ஏற்பட்டு, வெள்ளப் பாழ் ஏற்படுவதைக் கண்டு களித்த காங்கிரஸ் கட்சியும், பிற கட்சிகளும் சட்டமன்ற விதிமுறைகளைக் கண்டு கொள்ளாமல் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற கணக்குப் போட்டுக் கொண்டு வேகமாகச் செயல்பட்டனர். இதிலே மிகவும் வேதனை என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்குத் தனது பேருழைப்பை நல்கி, வியர்வையும் குருதியும் கொட்டிய எனது ஆருயிர் நண்பர் மதியழகன் அவர்களையே பயன்படுத்திக் கொண்டு அந்தக் கழகத்தையும் கழக அரசையும் வீழ்த்த நினைத்தார்களே அது தான் பெரும் வேதனை! இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டு விட்டு 1972 டிசம்பர் 2ஆம் நாள் சட்டமன்ற நிகழ்ச்சிக்குச் செல்லலாமெனக் கருதுகிறேன். 1983 ஜூன் திங்கள் 3ஆம் நாள் எனது அறுபதாவது பிறந்த நாள் விழா ! எம். ஜி. ஆரின் ஆட்சி, தமிழகத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் மதியழகன் அவர்கள் எம்.ஜி.ஆருடன் இல்லை. எம்.ஜி.ஆரைப் பிரிந்து வந்து மீண்டும் தி.மு. கழகத்தில் இணைந்து விட்டார். அந்த மதி அவர்கள் எனது பிறந்த நாள் விழாவில் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். 'நாற்பதாண்டுகளுக்கு முன்பு திருவாரூர் நகரில் என்னுடைய பால்ய நண்பராகச் சந்தித்த என்னுடைய அருமைச் சகோதரர், இன்றைக்கு ஏழு கோடி மக்களுடைய இனத் தலைவ ராகப் பெருமை பெற்று தமிழர்களை வழி நடத்திச் செல்லும் பாங்கினைக் கண்டு நான் பேருவுவகை கொள்கிறேன். நான் இன்று தலைவரின் பேச்சாற்றலைப் பற்றியோ, எழுத்- தாற்றலைப் பற்றியோ, அவர்களின் தியாகத்தைப் பற்றியோ, தலைமையைப் பற்றியோ பேசப் போவதில்லை. அவைகள் எல்லாம் அங்கீகாரம் பெற்று எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான் மிகவும்