உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நெஞ்சுக்கு நீதி காலை 11 மணி அளவில் சட்டமன்றம் கூடியது. முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு வேறு முக்கிய அலுவல்களைக் கவனிக்கலாம் என்று அவை முன்னவர் நாவலர் ஒரு தீர்மானத்தினை முன்மொழிந் தார். கேள்வி நேரத்தைப் பொறுத்தவரையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான் ஒத்தி வைக்க இயலும். யாராவது ஒரு உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க இயலாது. எனவே கேள்வி நேரத்தை ஒத்திவைக்க நாவலர் தீர்மானம் முன்மொழிந்த போதிலும், சிலர் குரல் ஓட்டின் போது அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரி விக்காத காரணத்தால் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப் பட்டது. 6 அகற்றப்பட கழக கேள்வி நேரம் முடிந்த முடிந்த பிறகு பிறகு சட்டமன்றக் உறுப்பினர் ஆற்காடு வீராசாமி அவர்கள் எழுந்து, "நானும், இந்த அவையின் 184 உறுப்பினர்களும் தற்போதைய சபாநாயகர் பதவியிலிருந்து அவர்கள் வேண்டுமென்று தீர்மானம் கொடுத்திருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 179-வது விதியில் அந்தத் தீர்மானத்தைத்தான் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது" என்று கூறி அதனை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறினார். 185 உடனே அவை முன்னவர் நாவலர் அவர்கள் எழுந்து, "உறுப்பினர் வீராசாமி கூறியதை நான் ஆதரிக்கிறேன். இந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு அதைப் பரிசீலிக்க நாங்கள் தயாராக வரப்படுமானால் இருக்கிறோம். ஆனால் இந்த அவையின் முன் தற்போதைய சபாநாயகர் அவர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டு மென்று கூறும் தீர்மானம் உள்ளது. இந்த அவையின் உறுப்பினர்களது நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்க முடியாது. இந்த அவையின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே இதன் நடவடிக்கைகளைத் தலைமை தாங்கி செல்ல நடத்திச் முடியும். முறையான சபாநாயகர் இருந்தால் தான், சபை கூடியதாகப் பொருள் கொள்ள இயலும். இதுவே அரசியல் சட்ட நெறியின்படியும் பாராளுமன்ற ஜனநாயகத்தின்- சட்ட விதியின்படி முக்கிய கோட்பாடாகும். இந்த அவையின் உறுப்பினர்கள் தற்போதைய சபாநாயகர் பதவியிலிருந்து அகற்றப்பட ஆகவே இந்த இந்த அவை வேறு தீர்மானம் கொடுத்துள்ளனர். 185