உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 நெஞ்சுக்கு நீதி குறிப்பிடப்பட்டதுமான குதிரைப் பந்தயத்தை அறவே ஒழிப்பது என்று இந்த அரசு முடிவு செய்கிறது. இவ்வாறு சட்டப் பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து - அந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்கான மசோதாக்கள் கொண்டு வந்து அவையிலே நிறைவேற்றப் பட்டன. அப்படி நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களில் மதுவிலக்கைப் பொறுத்தவரையில் கழக அரசு நடைமுறைப் படுத்திய போதிலும்; குதிரைப் பந்தயத்தைப் பொறுத்தவரை உச்ச நீதீமன்ற இடைக்காலத் தடையின் காரணமாக அது பத்தாண்டு காலமாக நடைமுறைக்கு வராமல் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அ. தி. மு.க. அரசின் சார்பில் அந்தச் சட்டத்தை எழுந்து நடமாடச் செய்யத்தக்க விதத்தில் விரைவுப்படுத்த தயாராக இல்லாததுதான் அதற்குக் காரணம் என்பதை நான் சொல்லாமல் அனைவரும் புரிந்துகொள்வர். 1974-ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் குழப்பமான நிலைமை. தமிழகத்தில் தி. மு. கழகம் மத்திய அரசிடம் வெகு வேகமாக மாநில சுயாட்சி கோரிக்கைக்காக குரல் கொடுத்துக் கொண்டி ருந்தது. முதலமைச்சர் என்ற முறையில் நான் கலந்துக் கொள்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் மாநில சுயாட்சி கோரிக்கைக்கு உள்ள நியாயங்களை எடுத்துக் காட்டியதோடு, இந்தியாவிலே உள்ள பழம்பெரும் தலைவர்கள் பலர் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகக் கூறிய கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லி வந்தேன். மாநில சுயாட்சிக்கு ஆதரவாக ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கூறிய கருத்துக்களையும் நான் என்னுடைய கூட்டங்களில் எதிரொலிக்கத் தவறவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அந்தக் காலக் கட்டத்தில் இந்திரா காந்திக்குப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தார். சர்வோதயத் தலைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அப்போது பீகாரில் உள்ள மந்திரிசபை மாற்றப்பட வேண்டும். அதை மாற்றுகிறவரை-வேறு தேர்தல் நடத்துகிறவரை தன்னுடைய போராட்டத்தை நிறுத்தமாட்டேன் என்று கூறி பீகாரில் பெரிய கிளர்ச்சியை நடத்தினார்! பீகாரே போர்களமாக இருந்தது. என்னை ஜெ.பி.அவர்களின் இந்தக் கிளர்ச்சி பற்றிப் பெங்களூரில் நிருபர்கள் சந்தித்து கருத்து கேட்டபோது