உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 517 சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன். உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு, பாலுட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த்தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலிகட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந் தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் நான் பெறுகிறேன் இன்று! ஆம்-என் வாழ்நாளின் குறிக்கோள் களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப்பள்ளு பாடுகிறேன். "நெடுநாள் ஆசை நிறைவேற்றம் நெஞ்சில் இன்பக் கொடியேற்றம் நீயும் சேர்ந்து பாடுக இந்த மகிழ்ச்சிப் பாடலை! வாழ்க வள்ளுவர்! வெல்க குறள் நெறி! என்று நான் அந்த வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா அன்று எழுதினேன். வள்ளுவர் கோட்டத் திறப்பு ஆளுநர் தலைமையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். குடியரசுத் தலைவரின் உரையை திரவியம் மொழி பெயர்த்தார். அந்த விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலோ, அந்த வள்ளுவர் கோட்டம் எழும்பிடக் காரண மாக இருந்தவன் என்ற முறையிலோகூட நான் அழைக்கப் படவில்லை. அழைக்கப்படாதது மாத்திரமல்ல, வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது அமைக்கப்பட்ட அந்த 'கல்' கூட அங்கே இருந்திடக் கூடாது என்று அப்புறப் படுத்தப்பட்டு விட்டதாகப் பின்னர் அறிந்தேன்,