உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 நெஞ்சுக்கு நீதி நாள்தான் சென்னையில் இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாடு பிரதமர் இந்திரா முன்னிலையில் நடை பெற்றது. இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் அவர்களைத் தலைவராகவும், மகாதேவன் பிள்ளை, கே.எஸ். ராமசாமி ஆகியோரை துணைத் தலைவர்களாகவும் அன்று அறிவித்தார்கள். கடற்கரையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசும் போது இந்திராகாந்தி தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்: "சென்னை நகரில் இனிமேல் குடிதண்ணீர் பிரச்னையை சமாளிக்க ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்கள் சென்னை நகருக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்காகவும் கிருஷ்ணா நதி மூலமாக ஐநூறு கோடி கன அடி தண்ணீர் - அதாவது மொத்த மாக 1,500 கோடி கன அடி தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள் ளனர். எனவே இனிமேல் சென்னையில் குடிதண்ணீர் பஞ்சமே ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்." "தி. மு. கழகத்தைத் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதனால் இந்திய அரசு - இலங்கை அரசுக்கிடையே நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார்." இது பிரதமர் இந்திரா அம்மையாரின் கடற்கரைப் பேச்சு! இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. கொண்டிருந்த உறுதியும்கூட இந்திராகாந்தி அவர்களை அப்போதே உறுத்தி யிருக்கிறது என்பதற்கு அவரது இந்தப் பேச்சு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தது.