உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

229


. ரோமாபுரிப் பாண்டியன் 229 வேள் மன்னனாகப் போக வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதிலும் முத்துநகை காணுகிற இருங்கோவேள் முற்றிலும் வேறு ருவத்தில் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்து கொண்டான். வேடம் அணியும் வேலை ஆரம்பமாயிற்று. காதில் கனத்த குண்டலங் கள், தலைவிரிகோலம், முரட்டுமீசைகள், முகத்தைக் கடுமையாகக் காட்டும் இளந்தாடி, மார்பிலே ஆபரணங்கள் - அவனது பிரதானியர் பார்த்தாலேகூட திடீரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் புதிய இருங்கோவேள் மன்னன் புறா அடைபட்டிருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டுவிட்டான். முத்துநகை அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்ததும் அங்குள்ள காவலன் அடையாளம் தெரியாமல் மன்னனைத் தடுத்து நிறுத்தினான். அவனிடம் தன் வேடத்தை விளக்கிவிட்டு உள்ளே நுழைந்தான் இருங்கோவேள். அவன் முதலில் பலகணி வழியே பார்த்தபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துநகை, இப்போதுகூட அது போலவே கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். அவன் உள்ளே நுழைந்தபோது காலடியோசை கேட்டு அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அதிலிருந்து அவளும் சரியாகத் தூங்காமல், தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். எழுந்தவள், இருங்கோவேளை உற்றுப் பார்த்துவிட்டு “யார்?” என்று அதட்டலாகக் கேட்டாள். “மன்னன்!' - என்று கம்பீரமாகப் பதில் கூறினான். முத்துநகையின் உடம்பெல்லாம் நடுங்கிற்று. அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. சுவாசப் பைகள் காற்றினால் நிரம்பி மார்பகம் விம்மி உயர்ந்தது; பெருமூச்சுக்குப் பின்னர் பழைய நிலையடைந்த காட்சியை இருங்கோவேள் சுவைத்தவாறு நின்று கொண்டிருந்தான். முத்துநகை தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு இருங்கோவேளுடன் கம்பீரமாகப் பேச முன் வந்தாள். “மன்னனா? எந்த நாட்டுக்கு? -இந்தக் கேள்வி இருங்கோவேளின் உள்ளத்தை எந்த அளவுக்குக் குடைந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. அப்படியே இடிந்து போய் நின்றான். "ஓகோ! இந்தக் காட்டுக்கு மன்னரா? -அடுத்த கேள்வியும் கேலியுடன் கலந்து எழுந்தது. "அடிமைப் பெண்ணே! பணிவாகப் பேசு! வேளிர் குலத் தலைவன் இருங்கோவேள் ஓர் எரிமலை - நீ பனிமலர்! நினைவில் வைத்துக் கொள்."