234
கலைஞர் மு. கருணாநிதி
234 கலைஞர் மு. கருணாநிதி யது. சந்தேகமில்லை. மலைப் பாம்புதான். அதைப் புரிந்து கொண்டதும் அரசி கீழே குதித்துவிட்டாள். குதித்த வேகத்தில் குதிரையில் தாவி ஏறிக் கொண்டாள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று குதிரையை முடுக்கினாள். இரையை விழுங்கி விட்டுக் கிடந்த மலைப் பாம்பு மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பாம்பிடமிருந்து தப்பிய பிறகு அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னையே நொந்து கொண்டாள். எதற்காகப் பாம்பிடமிருந்து ஓடி வர வேண்டும்? அதற்கே இரையாகியிருக்கலாமே என்பது தான் அந்த யோசனை. அவள் இப்படி நினைக்கும்போதே மனதுக்குள்ளிருந்து மற்றொரு பெருந்தேவி பேச ஆரம்பித்தாள். "பைத்தியக்கார ராணி! நீ எதற்காகப் புறப்பட்டிருக்கிறாய்? தற்கொலை செய்து கொள்வதற்கா? இல்லையடி இல்லை! உன் இலட்சியத்தை மறந்துவிடாதே; அதை நிறைவேற்றி விட்டுப் பிறகு செத்துப்போ;ம். ஓடு!ஓடு!' "இலட்சியத்தை என்னால் நிறைவேற்ற முடியுமா? எனக்கு அந்த வல்லமை இருக்கிறதா? என்ன இருந்தாலும் நான் பெண்தானே?" “பிறகேன் வீட்டை விட்டுக் கிளம்பினாய்? இந்த யோசனை முன்பே இருந்திருக்க வேண்டும் உனக்கு. நீ இனிமேல் இருந்துதான் என்ன செய்யப்போகிறாய்? நீ இப்போது உயிரோடிருப்பதாகவா எண்ணிக் கொண்டிருக்கிறாய்? பேதாய்! நீ செத்து எத்தனையோ ஆண்டுகள் ஓடி விட்டன. என்றைக்கு உன் மூச்சுப்பைகளில் நோய்க்கிருமிகள் குடியேறி னவோ அன்றைக்கே உன் உயிர் அந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டது. எந்தவிதத்திலும் செத்து விடக்கூடிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீ, இலட்சியத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஏன் சாகக் கூடாது? தளராதே! தயங்காதே!! போ; போ!" பெருந்தேவியின் உள்ளத்தில் பெரும் போராட்டம் எழுந்தது என்றாலும், முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த அவள் பயணத்தில் எந்தவிதத் தயக்கமும் ஏற்படவில்லை. தாமரையும் முத்துநகையும் முதன் முதலில் சந்தித்துப் பேசிய அருவிக்கரையின் பக்கம் வந்தாள். அந்த இடத்தைத் தாமரை பார்த்திருந் தால் எத்தனை எண்ணங்கள் படையெடுத்து அவளை அழவைக்குமோ யார் கண்டது? அருவிக் கரையைத் தாண்டி அரசியின் குதிரை மரமடர்ந்த மற்றொரு பகுதிக்குள் நுழைந்தது. அந்தப் பகுதியிலேதான் இருங்கோவேளும்