உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

271


ரோமாபுரிப் பாண்டியன் 271 "எப்போது இறந்தார்கள் பெருந்தேவியார்?" என்று கேட்டான் செழியன். - "அக்காள் என்று சொல்லுங்கள். ஏன் பெயரைச் சொல்லுகிறீர்கள்?" என்று தாமரை அழுதுகொண்டே பதில் கூறினாள், 12 "அக்காள்! அக்காள்! ஆம், வாழ்க்கையின் துளி இன்பமும் காணாமல் வேதனையுடன் - சளைக்காமல் போராடியவள் என் அக்காள்!” என்று செழியன் வாய்விட்டுக் கதறினான். சோழன் மாளிகையில் இருக்கும் அண்ணியின் உடலைக் காண வேண்டும் - அண்ணனைப் பற்றிய தகவல் அறிய வேண்டும் - இந்த வேதனையினிடையே செழியன் வெளியிட்ட செய்தி வேறு தாமரை உள்ளத்தைக் கலக்கிட ஆரம்பித்தது. செழியனை, இதுவரையில் பாண்டியனர் குலத்தில் பிறந்தவன் என்றுதான் அவள் கருதியிருந்தாள். இப்போதோ அவன் வேளிர்குலத்து அரசியின் தம்பியென்று கூறுகிறான். அப்படியானால் பெருந்தேவியார் பாண்டியர் மரபில் வந்தவராக இருக்குமோ? இந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் அவள் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். சேற்றிலும் சகதியிலும் அழுந்தியிருந்த அவளது மணிப்பாதங்களைப் போலவே மனமும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. "தயவு செய்து விவரமாகக் கூறுங்கள்; என் அண்ணியும் தாங்களும் எப்படிச் சகோதர உறவு?" செழியன், தாமரையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. தாமரையோ விடுவதாக இல்லை. "இந்த நேரத்திலேகூடக் கல்நெஞ்சம்தானா? என் அண்ணனுடைய கொடுமைகளுக்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் மலையென நிற்கும் தங்கள் கடின இதயம் -வைர நெஞ்சம் இப்போது இளகிடுவதால் தவறொன்றும் இல்லையே!" தாமரையின் கண்களில் மீண்டும் நீர் பொழிய ஆரம்பித்தது. செழியனின் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. இரண்டொரு தடவை அவன் உதடுகள் அசைந்தன. ஆனால் வார்த்தைகள் எதுவும் வெளிப்படவில்லை. அவளிடம் எதையோ சொல்லிவிட வேண்டு மென்று நினைத்து, உடனே அந்த நினைப்பை மாற்றிக் கொண்டான் போலும்! "தாமரை! என் கதையில் நீ இதுவரை கேட்டறியாப் புதுமையும் பயங்கரமும் நிறைய உண்டு. தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலம்வரும் அந்தக் காலம், நாமிருவரும் பேசக்கூடிய