உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

கலைஞர் மு. கருணாநிதி


324 கலைஞர் மு. கருணாநிதி முத்துநகையின் தலைமையில் அடவியில் புகுந்த பூம்புகார் மக்களின் உள்ளத்தை அச்சம்தொட்டுப் பார்க்கவில்லை. அவர்களின் நெஞ்சம் பிடிவாத உணர்ச்சியால் கெட்டிப்பட்டிருந்தது. தங்களின் தலைவன் கோச்செங்கணான் எங்கே அழைத்துச் சென்றாலும் போகத் தயாராக இருந்தார்கள். சோழப் பேரரசின் பெருமையை நிலை நாட்டுவதற் காகவும், பூம்புகாரின் தன்மானத்தை எடுத்துக் காட்டுவதற்காகவும் இருங்கோவேளின் மீது கொண்டுள்ள பகையுணர்ச்சியை வெளிப் படுத்துவதற்காகவும் தியாக ஊர்வலம் நடத்துவதாகவே அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். இல்லாவிட்டால் பஞ்சின்மீது நடந்தாலும் பாதம் நோகும் என்று வருந்தத்தக்க வஞ்சிக் கொடிகள், கல்லிலும் முள்ளிலும் காலில் இரத்தம் கசிய நடை பழகுவார்களா? பிஞ்சுக் குந்தைகளை இடுப்பிலே சுமந்தவாறு ஆவேச நடைபோடும் தாய்மார்களின் உணர்ச்சிக்கு எதனை உவமை காட்டுவது? முற்றிப்போன வற்றல் கிழடுகளின் நடையிலே காணும் வேகம் முரசுகொட்டிச் செல்லும் வீரர்களின் அணிவகுப்பிலே கூடக்காண இயலாத ஒன்றன்றோ? வீரக் கனல் உமிழும் கண்கள் படைத்த வாலிபர்களை, அவர்களுடன் போட்டியிடும் கிழவர்களை, உணர்ச்சி வேகம் துள்ள ஓடிவரும் தாய்மார்களை, குழந்தைகளை முத்துநகை எங்குதான் அழைத்துப் போவாள்? அய்யோ, அவள் போகும் பாதையைப் பார்த்தால் -மரமாளிகைக் கல்லவா செல்வது போல் தெரிகிறது! அங்குள்ள இருங்கோவேள் மன்னனின் படைகளுக் கெதிரே கொண்டுபோய்ப் போர்க்கருவி எதுவுமில்லாத பூம்புகார் நகரத்து மக்களைப் பலியிட்டு விடப் போகிறாளா? வேலும், வாளும், ஈட்டியும், கேடயமும் நிறைந்த அந்தப் படை வரிசையின் முன்னே கையில் போர்க்கருவி எதுவுமில்லாத பூம்புகார் மக்கள் என்ன செய்ய முடியும்? முத்துநகை, இப்படி ஒரு பைத்தியக்காரச் செயலில் ஈடுபட்டது ஏன்? சோழ மண்டலத்திற்காக உயிர் விடவும் துணிந்து விட்ட அந்த மங்கைநல்லாளின் திட்டம் பற்றி அவசர முடிவுக்கு வந்து விடாமல் மேலும் கவனிப்போம். காட்டு வழியில் ஒரு மரத்தின் மீது கோச்செங்கணான் ஏறிக் கொண்டான். மக்கள் வெள்ளம் அம்மரத்தைச் சூழ்ந்து நின்றவாறு தங்கள் தலைவனின் வாயைப் பார்த்துக் கொண்டு நின்றது. கோச்செங்கணான் தன்னுடைய விழிகளை நாலா திசையிலும் ஓடவிட்டு, மாற்றார் யாரும்