ரோமாபுரிப் பாண்டியன்
327
ரோமாபுரிப் பாண்டியன் 327 நாட்டுப் பெண்களுக்குத் தனி இன்பமாயிற்றே! அதிலும் பயங்கரமான சோதனைக்கு உங்கள் வீட்டுப் பிள்ளைகளை நான் அழைத்துப் போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்' இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. - சோழ நாட்டைக் காப்பாற்ற! இருங்கோவேளின் படைகள் புறப்படுகின்றன என்ற செய்தியை மன்னரின் காதில் போட்டாலோ, அவர் இந்நேரம் அதை அலட்சியப்படுத்திவிடுவார். நமது மன்னர் பெருவீரர், ஆற்றல் மிக்கவர், என்றாலும் எதையும் காலந் தாழ்த்தியே செய்யவேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர். இருங்கோவேளின் மனைவியை அடக்கம் செய்கின்ற நேரத்தில் அவனுக்கும் அழைப்பு அனுப்பிவிட்டு, அவன் மரமாளிகை நோக்கிப் படையெடுப்பதா என்றும் கேட்பார். அவரைச் சமாதானப்படுத்தி நம் வழிக்குத் திருப்புவதற்குள் இருங்கோவேளின் படைகள் பூம்புகாரை வளைத்துவிடும். இந்தக் காரணங்களால்தான் மன்னனை நம்புவதைவிட மக்களை நம்புவது மேல் என்ற முடிவுக்கு வந்தேன். நீங்களும் என் கையைப் பலப்படுத்தி விட்டீர்கள். நாங்கள் புறப்படுகிறோம். உங்கள் பிள்ளைகளிலே ஒருவனாகவே என்னையும் வழி அனுப்பி வையுங்கள். சோழ நாட்டின் மங்காத புகழை - குறையாத வீரத்தை மாற்றார் உணரச் செய்து, அந்த மாளிகையை நெருப்பின் வாயிலே தள்ளி விட்டுத் திரும்புகிறோம்! இருங்கோவேளின் படை அழிந்தால், பிறகு அவன் கையில் கோலில்லாத நொண்டிபோல் ஆகிவிடுவான். அவனை அடிமையாக்கிப் பூம்புகார்த் தெருவிலே இழுத்துச் செல்வோம்! என்னருமைத் தாயகத்துப் பெருமக்களே! புறப்படுங்கள்!" - கோச்செங்கணானின் இந்த முழக்கம் கேட்டுப் போருக்கு எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் ஆவேசத்துடன் புறப்பட்டார்கள். அவர்களை முதியவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். தங்கள் அருமைச் செல்வங்களுக்கு முத்தமளித்து விட்டுக் கோச்செங்கணான் பின்னே பூம்புகார் மக்கட்படை தொடரலாயிற்று. அதனை விட்டு இரண்டு கல் தொலைவில் பூம்புகார்ப் படை செல்லும் போது, எதிர்த்திசையில் இருங்கோவேளின் படைகள் வருவதை முத்துநகை உணர்ந்து கொண்டாள். உடன் அவள் நின்று, பூம்புகார் மக்க ளுக்குப் போராட வேண்டிய முறைப்பற்றி விளக்கமுரைத்தாள். அவளது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களும் செயல்படத் தொடங்கி னார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பூம்புகார் மக்கள் திடீரென மறைந்து விட்டார்கள். அவர்களின் தலைவன் கோச்செங்கணானையும் காண வில்லை. காட்டுமரங்கள் ஒவ்வொன்றின் மறைவிலும் ஒவ்வோர்