உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

கலைஞர் மு. கருணாநிதி


362 கலைஞர் மு. கருணாநிதி கொண்டு தங்களைக் கவிழ்க்க முயல்கிறார்கள் என்ற உண்மை தெளிவாக, என்னுடைய யோசனையும் பயன்படுமென்று நம்புகிறேன்!” ஆமாம்! நீ கூறுவதும் உண்மைதான்! சோழ நாட்டிலேயே எனக்கெதிராகச் சில தீய சக்திகள் வளர்கின்றன என்பதை நான் முதலிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன்!" "நாட்டிலே மட்டுமல்ல மன்னா! நமது அரண்மனையிலேயே அந்தக் கயவர்கள் சிலர் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாவிகளின் பட்டியலைத் தாங்கள் அணியும் யவனக்கிழவர் வேடத்தின் மூலம் அந்த வேளிர் வீரனிடமிருந்து இன்றிரவு அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்!" வளவனின் திட்டம் மன்னனின் மனத்தைக் கவர்ந்து விட்டது. வளவா! நீ போ! உன் யோசனைப்படியே ஏற்பாடுகளைக் கவனிக் கிறேன். தேவைப்பட்டால் உன்னைப்பிறகு அழைக்கிறேன்! என்று வளவனை அனுப்பிவைத்தான். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறு!