உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

கலைஞர் மு. கருணாநிதி


44 456 கலைஞர் மு. கருணாநிதி மெய்க்காவலனும், அந்தக் குற்றவாளியும் அப்பால் சென்று மறைந்த தும், காரிக்கண்ணனார் கரிகாலனை நோக்கி மெல்லக் கேட்டார்: 'ஆமாம்; அந்தக் காவலாளியின் முகத்தினைப் பார்த்தால் நம் தமிழ் நாட்டவனாகத் தெரியவில்லையே!" "தாங்கள் குறிப்பிடுவது சரிதான், புலவர் அவர்களே! அவன் வச்சிர நாட்டைச் சார்ந்தவன்." "அப்படியா? அவன் எப்படி நம்முடைய அரண்மனையிலே வந்து டம் பிடித்தான்?" "நான்தான் அவனை அலுவலில் அமர்த்தினேன். அவன் மட்டுமா, இன்னும் சில வெளிநாட்டுக்காரர்களும் கூட நம் அரண்மனையில் புதிதாக அலுவல் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கே வந்து குடியேறி விட்டவர்களுக்கு நாம்தானே வாழ்வளிக்க வேண்டும் என்று நாம் ஏதோ இரக்கப்பட்டு வேலையில் அமர்த்தினால், அவர்கள் ஒழுங்குமுறையோடு நடக்க மறுக்கிறார்கள்; நம்முடைய அரசு நிர்வாகம் நெறியோடு இயங்காதவாறு அதற்கு உலைவைத்திடவும் தலைப்படு கிறார்கள்; என்ன செய்வது?" "ஆமாம்; இவ்வளவு தொலைவு கடந்து வந்து அவர்கள் எவ்வாறு இங்கே குடியேறிட முடிந்தது?" ஓ! அதைப் பற்றிக் கேட்கிறீர்களா? நான் 'வாகை' என்னும் இடத்திலே குறுநில மன்னர்கள் சிலரைப் புறங்கண்ட பின்னர் இமயமலை சென்று நம்முடைய புலிக்கொடியினை நாட்டிவிட்டுத் திரும்பி வந்தேன் அல்லவா?" ஆமாம்! அங்கே கொடியை மட்டுமா நாட்டினீர்கள்? எந்தக் காலத்திலும் இந்தச் சோழ மன்னனின் பெருமை வடபுலத்திலே சுடர் வீசிடவேண்டும் என்பதற்காக இமயமலையின் இரும்பன்ன பாறைகளில் நம் புலிக்கொடியின் சின்னங்களையும் பல இடங்களிலே பொறித்தீர் களே! அது மட்டுமா! ஒரு கணவாய்க்குச் 'சோழர் கணவாய்' என்றும், ஒருமலைத் தொடருக்குச் 'சோழ மலைத்தொடர்' என்றும் கூடப் பெயர் களைச் சூட்டி வரலாற்றிலே ஓர் இடத்தினை அங்கே பதித்துவிட்டுத் தானே திரும்பினீர்கள் !' יין "தாங்கள் என்னவோ நான் இமயத்திலே சின்னங்கள் பொறித்திட்ட தையும், பெயர்களைச் சூட்டியதையும் பெருமையாகப் பேசுகிறீர்கள்! ஆனால், நம்மவர்கள் சிலரே என்னுடைய அந்த நடவடிக்கைகளை யெல்லாம் எவ்வளவு ஏளனமாக ஏசியிருக்கிறார்கள் தெரியுமா?" என்று வருத்தத்துடன் பகர்ந்தான் கரிகாலன்.