ரோமாபுரிப் பாண்டியன்
457
. ரோமாபுரிப் பாண்டியன் 457 "அவர்களுக்கு என்ன அரசே! எதனை வேண்டுமானாலும் இளக்கார மாகப் பேசிடுவார்கள்; எதற்கு வேண்டுமானாலும் எதிர்ப்புக் காட்டிடுவார்கள். அறிஞர்கள், கவிஞர்கள், ஆன்றோர்கள் இவர்களுக் காகச் சிலைகள் அமைப்பது, சின்னங்கள் பொறிப்பது, பெயர்களைச் சூட்டுவது எல்லாம் வெறும் வேடிக்கைக்காகவா? அல்லது வீண் பொழுது போக்கிடவா? பிற்காலத்தில் இந்த மண்ணிலே பிறக்கப்போகும் பிள்ளைகளும், பேரர்களும், 'ஆகா; நம்முடைய முன்னோர்கள் எங்ஙனமெல்லாம் பேரறிஞர்களாகவும், பெருங்கலைஞர் களாகவும், ஆற்றல் மறவர்களாகவும், அரசியல் வும் உலகப்புகழை அடைந்திருக்கிறார்கள்! அவர்களைப் போலவே நாமும் ஏன் ஆகக் கூடாது புகழினை அணைத்திடக் கூடாது? என்றெல்லாம் எண்ணிட- இறும்பூது எய்திட - அதன் மூலம் எழுச்சியினைப் பெற்றிடத் தான் அந்தச் சின்னங்கள். சிலைகள், பெயர்கள் யாவும் தோற்றுவிக்கப்படு கின்றனவே அல்லாமல் வேறு எதற்கு?" - "அவர்கள் தூற்றினால் தூற்றிவிட்டுப் போகட்டும் புலவர் அவர்களே! தூய்மையான உள்ளத்துடன் நாம் துவங்கிவிட்ட பயணத்தை பாதியி லேயே அவர்களுக்கு அஞ்சி நிறுத்திடப்போகிறோமா?... அது கிடக் கட்டும்; நான் இமயத்திலிருந்து திரும்பும் வழியில் வச்சிரநாட்டு மன்ன னையும், மகதநாட்டு அரசனையும், அவந்தி நாட்டு வேந்தனையும், தோற்கடித்தேன் அல்லவா?" "ஆமாம், அந்த வெற்றிகளின் சின்னங்களாகத்தானே வச்சிர நாட்டுச் சிற்பிகள் சமைத்த முத்துப் பந்தரும், மகத நாட்டுச் சிற்பிகள் எழுப்பிய பட்டிமண்டபமும், அவந்தி நாட்டுக்காரர்கள் அழகுற அமைத்த தோரண வாயிலும் இன்றும் நம் பூம்புகார் நகருக்குப் பொலிவினைத் தந்த வண்ணம் உள்ளன!" அந்தச் சிற்பிகளோடு வந்த சில பணியாட்கள்தாம் இங்கே குடியேறியவர்கள். அவர்களைத்தாம் நம் அரண்மனையில் வேலைக்கு அமர்த்தி வைத்தேன். அவர்கள் என்னவென்றால், இப்படிக் 'கையூட்டுப் போன்ற கேவலமான பழக்கங்களுக்கெல்லாம் இரையாகின்றார்கள்; கீழறுப்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள்..." - கரிகாலன் இவ்வாறு மொழிந்து கொண்டிருக்கும் பொழுதே பாண்டியத் தளபதி நெடுமாறன் பரபரப்புடன் உள்ளே நுழைந்திட்டான். 'வாரும் நெடுமாறரே! தாமரையைப் பற்றிய புதுச் செய்தி ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான் சோழ மாமன்னன். 'இல்லை! அரசே! ஆனால் எங்களுடைய வேந்தர் பெருவழுதிப் பாண்டியர் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு முக்கியமான மடலைத்