ரோமாபுரிப் பாண்டியன்
527
ரோமாபுரிப் பாண்டியன் 527 உலகப் புகழின் ஒளி வட்டம் அவரது தலையைச் சுற்றிலும் விரிந்த வண்ணம் உள்ளது என்பதனையும் உணர்ந்து மகிழ்ந்திட்டான் அவன். சில நொடிகள் சென்றிட்ட பின்னர்-சுவை நீரினைத் தானும் பருகியவாறே லிவியா இங்ஙனம் இயம்பினாள்; "உங்களுடைய பாண்டியநாட்டு 'முத்தாரம்' என்றால் எனக்கு அளவில்லாத ஆசை! என்ன விலையென்றாலும் வாங்கி விடுவேன்" உடனே அகஸ்டஸ் இடைமறித்தார், “பார்த்தீர்களா, தூதுவர் அவர்களே? நீங்கள் இந்த நாட்டில் அடி வைப்பதற்குள்ளேயே உங்கள் நாட்டு முத்து மீதுதான் என் மனைவியின் சிந்தனை செல்கிறது. ஆமாம்.. உங்கள் நாட்டுப் பெண்களும் இப்படித்தான் - நகை என்றால் பைத்தியம் பிடித்து அலைவார்களா?" "பெண்கள் எந்த நாட்டில் பிறந்தால் என்ன? எந்த மொழியில் பேசினால் என்ன? அவர்கள் இதயம் ஒன்று தானே? எத்தனை நகைகளைப் பூட்டினாலும் அவர்களுடைய ஆசைப்பசி அடங்கவே அடங்கிடாது!' சரியாகச் சொன்னீர்கள், தூதுவரே! சரியாகச் சொன்னீர்கள்! பெண்களின் நெஞ்சக் கடலை நீங்கள் மிகச் சரியாகத்தான் அளந்து வைத்திருக்கிறீர்கள்” என்று கை கொட்டி நகைத்திடலானார் அகஸ்டஸ். "ஏதேது! இந்தத் தூதுவர் மிகப் பொல்லாதவராக இருப்பார்போல் இருக்கிறதே! பெண்கள் குலத்தையே ஒரே மட்டமாகத் தாக்கிவிட்டாரே! ஒரு வேளை அவருடைய மனைவி படாதபாடுபடுத்தி இவருக்கு நிறையச் செலவு வைத்திருப்பாளோ என்னவோ?” என்று விளையாட் டாகவே மறுப்புக் கணையினைத் தொடுத்திட்டாள் ஜூலியா. "இவர் இன்னும் ஒன்றிக் கட்டைதான்!" என்று சிப்பியோ இலத்தீனில் மறுமொழி பகர்ந்திட்டான். 11 'அதற்கும் அவள் விட்டுக்கொடுத்திடாமல், இவருடைய காதலி எவளாவது ஏமாற்றியிருப்பாள்; அந்த தோல்வியைத் தாங்கிட முடியாமல் தான் பெண்குலத்தின் மீதே இவர் ஆத்திரத்தைக் கக்குகிறார்!” என்றாள். அவளுடைய கூற்றினுக்குச் செழியன் பதிலடி கொடுத்திடு முன்னர் அகஸ்டஸ் முந்திக்கொண்டுவிட்டார். "மணம்புரிந்தோ, மையல் கொண்டோதான் ஒரு பெண்ணின் மன இயல்பைத் தெரிந்துகொள்ளவேண்டுமா, என்ன? பார்த்தாலே