ரோமாபுரிப் பாண்டியன்
549
ரோமாபுரிப் பாண்டியன் 549 "வெட்கம்! வெட்கம்!"... என்று தம் செவிகளே கிழிந்திடும்படி எழுந்திட்ட கூக்குரல்களையெல்லாம் அவர் பொருட்படுத்திடவே இல்லை! சில விநாடிகள் சென்றதும் அகஸ்டஸின் பரந்த முகத்தினில் வறட்டுப் புன்னகையொன்று இழையலாயிற்று. ஜூனோவிடம் “இனி, நீ மொழி பெயர்க்கலாம்." என்ற அவர், செழியனை நோக்கினார். "மேசனஸ் இவ்வாறு விருந்தின் நடுவே எழுந்து போனமைக்காக நீங்கள் ஒன்றும் வருந்திட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். முதுமையின் காரணமாகவோ என்னவோ அவரது மனநிலை இப்பொழு தெல்லாம் சரியாக இருப்பதில்லை. எனவே, அவருடைய செய்கையை நீங்கள் பொருட்படுத்திடவேண்டாம்" என்றார் அகஸ்டஸ். 41 அவருடைய செய்கையைக் கண்டு எனக்கு வருத்தம் ஏதும் இல்லை; ஆனால் தங்கள் மனம் நொந்திடும் அளவுக்கு நிலைமை மாறியதைக் கண்டுதான் என்னால் வருந்திடாமல் இருக்க முடியவில்லை. தங்கள் பொறுமை, பொறுப்புணர்ச்சி, பெருந்தன்மை எல்லாமே என் உள்ளத் தினை மிகவும் கவர்கின்றன." என்று மறுமொழி பகர்ந்திட்டான் செழியன்.