558
கலைஞர் மு. கருணாநிதி
558 கலைஞர் மு. கருணாநிதி 'உங்கள் ரோம் நகரத்தில் தான் நூற்றுஎழுபது 'பாத்' துக்கள் போல் இருக்கின்றனவாமே! எந்த 'பாத்'தின் பெயரை நான் நினைவில் வைத்துக்கொண்டு சொல்வது?' "போகட்டும், இன்னும் நீங்கள் உணவு அருந்தவில்லை அல்லவா?" "இனிமேல்தான்!" "நல்லது. உணவுக் கூடத்துக்கு வாருங்கள். அங்கே உங்களுக்குப் புதுமையான விருந்து கிடைக்கும்?" என்றவாறே, அவனை முந்திக் கொண்டு, துள்ளிக் குதித்தோடினாள் ஜூனோ. 'என்ன புதுமையான விருந்தாக இருக்கும்?' என்று எண்ணியவாறே முகம், கை கால்களை அலம்பிக்கொண்டு உணவுக் கூடத்திற்கு வந்திட்ட செழியன், அங்கே மேசை மீது ஜூனோ பரிமாறிக்கொண்டிருந்த வற்றைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்திட்டான். மலர்ந்த மல்லிகை இதழ்களைப் போல் வெள்ளை வெளேர் என்று தென்பட்ட அரிசிச் சோறே அவனை அவ்வாறு வியப்பில் ஆழ்த்தியது. உண்பதற்காக மேசையை ஒட்டிக் கிடந்திட்ட இருக்கையினில் வந்து அமர்ந்திட்ட செழியன்., "ஆமாம், உங்கள் ரோம் நாட்டிலே கோதுமை தானே கிடைக்கும்; இந்த அரிசி உங்களுக்கு எப்படிக் கிட்டியது?” என்று கேட்டான். "நீங்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது? எங்கள் அகஸ்டஸ் பெருமகனார் மனம் வைத்திட்டால், இந்த உலகத்திலே கிடைத்திடாத எந்த பொருளேனும் உண்டா? ஆனால், இது உங்களுக்கென்றே உங்கள் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்ந்த வகை அரிசியே ஆகும்!" "குழம்புகூடத் தமிழ் நாட்டில் வைக்கப்படுவது போலவே மூக்கைத் துளைக்கிறதே!" "உங்கள் நாட்டு ஏலம், இலவங்கப்பட்டை முதலான மணம் வீசிடும் பொருள்களைச் சேர்த்துச் செய்திட்டால் மூக்கை துளைத்திடாமல் வேறு என்ன செய்யுமாம்!" "இது என்ன வெறும் ஈரல் துண்டுகளாக எடுத்துப் போடுகிறாய்! அதுவும் இவ்வளவு பெரிய துண்டுகளாக!" ட்டு ஈரலாக இருந்திருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டிருப்போம்!' "அப்படியானால் இது வேறு எதனுடைய ஈரல்?"