உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

565


ரோமாபுரிப் பாண்டியன் 565 பின்னர், அக்கலையரங்கம் முழுவதிலும் களிப்பு வெள்ளம் கங்கு கரையற்றுப் பொங்கிப் பெருகிட, தன் பருத்த உடலினை நெளித்து நெளித்து ஆடிடும் யானையின் நடனத்திலேயே ஆர்வத்துடன் அவள் பார்வையைச் செலுத்திடலானாள். லிவியா என்ன, யாருமே இனிமேல் தங்களைக் கவனிக்கப் போவ தில்லை என்னும் துணிச்சல் வந்து விட்டது போலும் ஜூனோவுக்கு. அவள், செழியனின் வாயைக் கிளறத் தொடங்கிவிட்டாள். "நீங்கள் என்ன மரக்கட்டையா? இல்லை; மண் பொம்மையா?" "ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று சற்றுத் திகைப்புடனேயே கேட்டான் செழியன். 'இல்லை எல்லோருமே இங்கே ஒவ்வொரு வேடிக்கையினைக் கண்டிடும் பொழுதும் உற்சாகத்தோடு கைகளைத் தட்டி ஆர்ப்பரிக் கிறார்கள். நீங்கள் மட்டும். 'உம்' என்று கற்சிலை மாதிரி உட்கார்ந்திருக் கிறீர்களே!" "மனிதர்கள் மடிந்து விழுந்திடும்பொழுது மகிழ்ச்சியாவது, மண்ணாங்கட்டியாவது? இதற்குப்போய் நான் கைகளை வேறு தட்ட வேண்டுமா? நன்றாக இருக்கிறது! "என்ன செய்வது? இம்மாதிரியான வேடிக்கைகளைக் கண்டு களிப்பது எங்கள் நாட்டில் தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ள பழக்கம். ஏன், உங்கள் தமிழகத்திலே மாட்டுச் சண்டைகள், கோழிச் சண்டைகள் எல்லாம் நடத்தி வேடிக்கை பார்ப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே!' 'நீ சொல்வதைப் பார்த்தால் மாடு - கோழிகளுக்கும், மனிதர்களுக் கும் வேறுபாடே இல்லை என்று கருதுவதாகத் தெரிகிறதே! 'தவறு, வாய் பேசாத - வஞ்சனையற்ற - அந்த விலங்கினத்தையும், பறவை இனத்தையும்விட மனிதர்கள் அத்துணை உயர்ந்தவர்கள் அல்லர் என்பதே என் தாழ்மையான எண்ணம். நீங்களேதான் பாருங்களேன்; அகஸ்டஸ் பெருமகனார் எவ்வளவோ பொறுமையோடு - நல்லெண் ணத்தோடு-பெருந்தன்மையோடு விரைந்து செயலாற்றிட முற்படும் பொழுதும் மேசனஸ் போன்றவர்கள் புழுதியை வாரித் தூற்றிடவில் லையா? ஏசல் - ஏளனம் - ஏகடியம்... என்று தங்கள் பயன்பாட்டினைப் பலவீனப்படுத்திக் கொள்வதில்தானே அவர்கள் குதூகலம் அடை கிறார்கள்.'