உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

கலைஞர் மு. கருணாநிதி


578 கலைஞர் மு. கருணாநிதி இதோ மருந்து கொண்டு வருகிறேன்" என்றவாறே பின்கட்டினை நோக்கி விரைந்திட்டார் மருத்துவர். சிப்பியோவின் முகம் ஏனோ சட்டென்று கறுத்து விட்டது. அவரைப் பின் தொடர்ந்தே சென்றிட்ட அவன், “என்ன மருத்துவரே! அவர் தமிழகத் தூதுவர் என்று தெரிந்திருந்தும் அவரைப் போய் முக்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு நீங்கள் பாட்டுக்கு உள்ளே வந்துவிட்டீர்களே! மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள், முதியவர்கள், சிறப்பு விருந்தினர் கள் ஆகியோரை நாற்காலியில் அமரச் செய்திடுவதுதான் நம்நாட்டுப் பண்பாடு -பழக்கம் என்பது உங்களுக்கு தெரியாதா?" என்று தாழ்ந்த குரலில் இலத்தீன் மொழியினில் கடிந்து கொண்டான். "மன்னித்துக் கொள் சிப்பியோ! ஏதோ நினைப்பினில் மறந்தே போய்விட்டேன்” என்று மொழிந்திட்ட அவர், பரபரப்போடு நாற் காலியை எடுத்து வந்து செழியனின் அருகே போட்டு, அதிலே அமர்ந் திடுமாறு சைகை காட்டினார். சிப்பியோவும் அவரும் உரையாடியவற்றைப் புரிந்து கொள்ளா செழியன், அவர் சைகை காட்டியவாறே நாற்காலியில் போய் உட்கார்ந் திட்டான். சிறிது நேரத்திலேயே சிகிச்சை முடிந்துவிட்டது. சிப்பியோ, 'டெனரீ' எனப்படும் வெள்ளி நாணயங்கள் இரண்டினை எடுத்து மருத்துவரிடம் நீட்டினான். அவரோ அதனை வாங்கிட அறவே மறுத்துவிட்டார். பின்னர் இளைஞர்கள் இருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வீதிக்கு வந்தனர். தேரினில் ஏறிக் கொண்டதும், "இந்த மருத்துவர் பெரிய செல்வச் செழுமை உள்ளவராக இருந்திடுவார் என்று எண்ணினேன். இவரோ மிகமிக எளிமையான இல்லத்தில் -எளிய வாழ்க்கையே வாழ்கின்றாரே!" என்று தன் வியப்பினைத் தெரிவித் திட்டான் செழியன். - ஓகோ! 'மருத்துவர்' என்றதும் அவர் உயர்குடியில் பிறந்தவராக - வசதி, வாய்ப்புகள் மிகுந்தவராகத்தான் இருப்பார் என்று எண்ணிவிட் டீர்கள் போல் இருக்கிறது! ஆனால் எங்கள் ரோமாபுரியிலே மற்ற எல்லாத் துறைகளும் தழைத்துச் சிறந்திட்ட போதிலும், பன்னெடுங் காலமாகவே மருத்துவத் துறை மட்டும் வளர்ச்சியுற்றிடவே இல்லை. கிரேக்கர்கள்தாம் முதன்முதலில் இங்கே மருந்து வகைகள் சிகிச்சை முறைகள் முதலானவற்றைப் பரப்பினார்கள். அந்த மருத்துவர்களோ பெரும் பாலும் அடிமைகள் - அல்லது அடிமைகளாக இருந்து விடுதலை பெற்