இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
600
கலைஞர் மு. கருணாநிதி
600 கலைஞர் மு. கருணாநிதி பெயர் எடுத்திட முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டிடும் அகஸ்டஸ் பெருமகனாரின் செயல் வேகம் - சீரிய திட்டங்கள் - அவர் தன்னை மிக மேலாக மதித்து நடத்துவதோடு நில்லாமல் தன்னுடைய உடன்பிறப்பாகவே ஏற்றுக் கொண்டாற் போல் காட்டிடும் அரவணைப்பு - அன்பு வெள்ளம் எல்லாமே செழியனின் இமைக் கூட்டினுள்ளே அரங்கேறி அவனை அயர்ந்து உறங்கவிடாமல் ஆட்டிப் படைத்திட்டன. பொழுது புலர்ந்திடு முன்னரே அவன் படுக்கையை விட்டு எழுந்துவிட்டான். தன்னுடைய ஆடைகள், போர்க் கருவிகள், ரோமாபுரி வந்த பின்னர் தான் வாங்கிய விந்தையான பொருள்கள் எல்லாவற் றையும் பெரிய - சிறிய பேழைகளில் அடுக்கித் தமிழக பயணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அத்துணை விரைவாக அவன் படுக்கைக்கு விடை கொடுத்திட்டான்.